menu-iconlogo
logo

Naanga Puthusa

logo
Testi
பெ: நாங்க புதுசா..ஆ

நாங்க புதுசா, கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க

ஆ: நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க

ஆ&பெ: ஹ.. புதுசா... கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க

டமுக்கடிப்பான் டீயாலோ

தமுக்கடிப்பான் லாயாலோ

டமுக்கடிப்பான் டீயாலோ

தமுக்கடிப்பான் லாயாலோ

ஆ: ஏ . சிங்கி…

பெ: ஏ … சிங்கா

ஆ: ஏ . சிங்கி..

பெ: ஏ … சிங்கா

ஆ: கண்.ணாலே ரகசியம் பேசிக்கிட்டோம்

நாங்க ரெண்டு பேரும் காதல் வலை வீசிப்புட்டோம்

பெ: சிக்கனமா கண்ணாலம் முடிச்சிக்கிட்டோம்

அதை சீர்திருத்த முறையில நடத்திப்புட்டோம்

ஆ: பெத்தாலும் ஒன்னு. ரெண்டு பெத்துப்.போடுவோம்

அதுக்கு ஒத்துமையா ரெண்டு பேரும் பாடுபடுவோம்

பெ: ஊதாரி புள்ளைகளை பெக்க மாட்டோம்

அது ஊரு வம்பை வாங்கும்படி வைக்க மாட்டோம்

ஆ: நாங்க புதுசா...

ஆ&பெ: நாங்க புதுசா

கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க

பெ: ஊரு விட்டு ஊரு மாறி போவோமுங்க

ஆனா உங்களாட்டம் பேரு கெட்டுப் போகமாட்டோம்

ஆ: எல்லோர்க்கும் நல்லவரா இருப்போமுங்க

எங்க கொள்கையிலே எந்.நாளும் மாறமாட்டோம்

பெ: நரிக் கொம்பு வித்தாலும் விப்போமுங்க

ஆனா நரி போல வஞ்சனைகள் செய்யமாட்டோம்

ஆ: பாசி மணி ஊசி எல்லாம் விப்போமுங்க

ஆனா காசுக்காக மானத்தையே விக்கமாட்டோம்

ஆ&பெ: நாங்க . புய்ஷா…ஆ.

நாங்க புதுசா கட்டிகிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும் வானம்.பாடிதானுங்க..

பெ: படி அரிசி கிடைக்கிற காலத்துல

நாங்க படியேறி பிச்சை கேட்க போவதில்லே

ஆ: குடிசையெல்லாம் வீடாகும் நேரத்திலே

நாங்க தெருவோரம் குடியேற தேவையில்லே

பெ: சர்க்காரு ஏழை பக்கம் இருக்கையிலே

நாங்க சட்டதிட்டம் மீறி இங்கே நடப்பதில்லே

ஆ: எல்லாரும் ஒன்னாக நினைக்கையிலே

நாங்க எதையும் எப்பவும் இங்கு மறைப்பதில்லே

ஆ&பெ: நாங்க புதுஷா

நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க

ஹ... புதுசா

கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க

நல்ல பாட்டு படிக்கும், வானம்.பாடிதானுங்க

டமுக்கடிப்பான் டீயாலோ

தமுக்கடிப்பான் லாயாலோ

டமுக்கடிப்பான் டீயாலோ

தமுக்கடிப்பான் லாயாலோ

ஆ: ஏ . சிங்கி…

பெ: ஏ … சிங்கா

ஆ: ஏ . சிங்கி..

பெ: ஏ … சிங்கா

Naanga Puthusa di T. M. Soundararajan/P. Susheela - Testi e Cover