பாவை உந்தன் கூந்தல் இன்று
போதை வந்து ஏற்றும் போது
பாத்து பாத்து ஏங்கும் நெஞ்சில்
வந்திடாத மாற்றம் ஏது
பார்வை செய்த சோதனை
நாளும் இன்ப வேதனை
காதல் கொண்ட காமனை
கண்டு கொண்டு நீ அணை.
கூடினேன் கொண்டாடினேன்
என் கோலம் வேறு ஆனேன்
தாவினேன் தள்ளாடினேன்
உன் தாகம் தீர்க்கலானேன்
பாலும் தெளிதேனும்
பறிமாற நேரம் வந்ததே
நான் என்பது நீ அல்லவோ, தேவ தேவா
இனி நான் என்பது நீ அல்லவோ, தேவ தேவா
தேவலோகம் வேறு ஏது ?
தேவன் இங்கு உள்ள போது
வேதம் ஓது !
நான் என்பது நீ அல்லவோ, தேவ தேவி
இனி நான் என்பது நீ அல்லவோ, தேவ தேவா