menu-iconlogo
huatong
huatong
avatar

vaanatha paarthen

Chandrabosehuatong
Pushkalaramanhuatong
歌詞
レコーディング
Film:manithan

music:chandrabose

lyrics :vairamuthu

singer:S.P.balasubramaniyan

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே –

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே –

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க

வெளியே உள்ள அத்தனை பேரும்

புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

குரங்கிலிருந்து பிறந்தானா?

குரங்கை மனிதன் பெற்றானா?

யாரை கேள்வி கேட்பது?

டார்வின் இல்லையே…

கடவுள் மனிதனை படைத்தானா?

கடவுளை மனிதன் படைத்தானா?

ரெண்டு பேரும் இல்லையே ரொம்ப தொல்லையே –

அட நான் சொல்வது உண்மை

இதை நீ நம்பினால் நன்மை…

அட நான் சொல்வது உண்மை

இதை நீ நம்பினால் நன்மை…

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

சில நாள் இருந்தேன் கருவரையில்

பல நாள் கிடந்தேன் சிறை அறையில்

அம்மா என்னை ஈன்றது அம்மாவாசையம்

அதனால் பிறந்தது தொல்லையடா

ஆனால் என் மனம் வெள்ளையடா

பட்டபாடு யாவுமே பாடம் தானடா

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?

இல்லை போராட்டமே வாழ்க்கை…

ஒரு பூந்தோட்டமா வாழ்க்கை?

இல்லை போராட்டமே வாழ்க்கை…

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

உள்ள போன அத்தனை பேரும் குத்தவாளி இல்லீங்க

வெளியே உள்ள அத்தனை பேரும்

புத்தன் காந்தி இல்லீங்க

வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன்

மனுஷனை இன்னும் பார்க்கலையே

அட பல நாள் இருந்தேன் உள்ளே

அந்த நிம்மதி இங்கில்ல…

அந்த நிம்மதி இங்கில்ல…

Chandraboseの他の作品

総て見るlogo