menu-iconlogo
huatong
huatong
歌詞
収録
உன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது

ஒண்ணும் இல்லை ஒண்ணும் இல்லை

உன்ன விட ஒரு உறவுன்னு சொல்லிக்கிட

யாருமில்லை யாருமில்லை

வாக்கப்பட கிடைச்சான் விருமாண்டி

சாட்சி சொல்ல சந்திரன் வருவாண்டி

சாதி சனம் எல்லாம் அவன் தான்டி

கேட்ட வரம் உடனே தந்தான்டி

என்னை விட உன்ன சரி வர புரிஞ்சிக்க

யாருமில்லை எவருமில்லை

உன்ன விட

என்ன விட

அல்லி கொடிய காத்து அசைக்குது

அசையும் குளத்து கொடம்பு கூசுது

புல்லரிச்சு பாவம் என்னை போலவே அலைபாயுது

நிலவில் காயும் வேட்டி சேலையும்

நம்மை பார்த்து சோடி சேருது

சேர்த்து வைச்ச காத்தே

துதி பாடுது சுதி சேருது

என்ன புது தாகம் அனலாகுதே என் தேகம்

யாரு சொல்லி தந்து வந்தது

காணா கனா வந்து கொல்லுது

இதுக்கு பாரு தான்

மோட்சமா மோட்சமா மோட்சமா

உன்ன விட

காட்டு வழி காளைங்க கழுத்து மணி

கேட்கையில நமக்கு அது கோயில் மணி

ராத்திரியில் புல்வெளி நனைக்கும் பனி

போத்திகிற நமக்கு அது மூடு துணி

உன்ன விட

ஒங்கூட நான் கூடி இருந்திட

எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா

நூறு ஜென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

என்ன கேட்குற சாமிய?

நூறு ஜென்மம் உன் கூட

Kamal Hasan/Shreya Ghoshalの他の作品

総て見るlogo