என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தரர ரத்ததா... தொடருதே தினம் தினம் தரர ரத்ததா... என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே பன்னீரை தூவும் மழை சில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இந்நேரமே என் நெஞ்சில் என்னனவோ வண்ணங்கள் ஆடும் நிலை என் ஆசை உன்னோரமே வெண்நீல வானில் அதில் என்னென்ன மேகம் ஊர்கோலம் போகும் அதின் உள்ளாடும் தாகம் புரியாதோ.. என்.. எண்ணமே அன்பே... என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் தரர ரத்ததா... தொடருதே தினம் தினம் தரர ரத்ததா... என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே dhaa dhadhadha dhooo...