menu-iconlogo
huatong
huatong
avatar

Konjam Konjam

Mahua Kamathuatong
nettez3dzlhuatong
歌詞
レコーディング
கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா

ஏன் புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா

ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே

விருப்பமாய் நினைத்தேனே

எனக்குள்ளே இரண்டானேன்

இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே

மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ.

ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே

அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா

ஏன் புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா

ஏன் புரியவில்லை

இவன் இருளா இல்லை ஒளியா எனக்குள் குழப்பம்

புரியவில்லை

இவன் விரலா இல்லை நகமா சின்ன தயக்கம்

எனக்குள் இவன் மெல்ல இவனுக்குள் நான் மெல்ல

இது சரியா புரியவில்லை

காதல் வரவில்லை வந்துவிட வழியில்லை

வந்து விட்டதா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே

மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ.

ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே

அழைக்காதே உன்னை புதைக்காதே

எங்கோ இருந்தான் என்னுள் நுழைந்தான்

எப்படி புகுந்தான் புரியவில்லை

லேசாய் சிரித்தான் லேசாய் முறைத்தான் என்ன விடையோ

வழக்கம் போல் வருகிறான் வம்புகளும் புரிகிறான்

என்ன நினைப்பான் புரியவில்லை

நானே சொல்லிவிட்டால் நானே ஒப்புக்கொண்டால்

தவறில்லையா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே

மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ.

ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே

அழைக்காதே உன்னை புதைக்காதே

கொஞ்சம் கொஞ்சம் எனக்கும் உனை பிடிச்சிருக்கா

ஏன் புரியவில்லை

கொஞ்சம் கொஞ்சம் எனக்குள் ஆசை இருக்கா

ஏன் புரியவில்லை

வெளியிலே மறைத்தேனே

விருப்பமாய் நினைத்தேனே

எனக்குள்ளே இரண்டானேன்

இது காதல் தானா புரியவில்லை

ஏ பெண்ணே உன்னை மறைக்காதே

மறைக்காதே உன்னை தொலைக்காதே ஓ.

ஏ நெஞ்சே உன்னை அழைக்காதே

அழைக்காதே உன்னை புதைக்காதே

Mahua Kamatの他の作品

総て見るlogo