menu-iconlogo
huatong
huatong
avatar

mariyamma mariyamma

Manikka Vinayagam/k.s.chitrahuatong
sheendalehuatong
歌詞
レコーディング
மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங்கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்

நினச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி

உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா

காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மண்ணுக்குள் நீ நல்ல நீரம்மா

காத்தும் கனலும் நீயம்மா

வானத்தபோல் நின்னு பாரம்மா

வந்தேன் தேடி நானம்மா

இந்த மனம் முழுதும் நீதானே…...

வந்த வழி துணையும் நீதானே

தங்க திருவடிய தொழுதோமே…...

இங்கு மனம் உருக அழுதோமே

சீரேஸ்வரி காமேஸ்வரி

வேறாரு நீதானே காப்பு

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

வானெல்லாம் வாழ்த்துத்தான் கேக்கட்டும்

வாழ்வே வளமே பாக்கட்டும்

நீ எங்க தாய் என்று காணட்டும்

நிழலும் நிஜமா மாறட்டும்

சக்தி முழுதும் தந்து காப்பாயே…...

முக்தி நிலையை தந்து சேர்ப்பாயே

பக்தி மனம் விரும்பும் என் தாயே…...

நித்தம் பரிதவிக்கும் உன் சேயே

சாட்சி சொல்லும் தாயே துணை

தீயெல்லாம் பூவாக மாறட்டும்

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

கரு மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

தலை மேல மணி மகுடம்

என் தாயி தந்த பூங்கரகம்

நிலையாக நிலைக்க வைக்கும்

நினச்சதெல்லாம் பலிக்க வைக்கும்

உன்ன நெனச்சபடி

உண்மை ஜெயிக்கும்படி

வேண்டும் வரம் தா மாரியம்மா

காவல் நீதான் காளியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

மாரியம்மா மாரியம்மா

திரி சூலியம்மா நீலியம்மா

Manikka Vinayagam/k.s.chitraの他の作品

総て見るlogo