menu-iconlogo
huatong
huatong
avatar

Yesuvai naam enge

Margochis Jesus Voicehuatong
Margochis.Chuatong
歌詞
収録
இயேசுவை நாம் எங்கே காணலாம்

அவர் பேசுவதை எங்கே கேட்கலாம்

இயேசுவை நாம் எங்கே காணலாம்

musi

பனி படர்ந்த மலையின்

மேல் பாக்க முடியுமா

பனி படர்ந்த மலையின்

மேல் பாக்க முடியுமா

கனி நிறைந்த சோலையின்

நடுவே காண முடியுமோ ?

காண முடியுமோ

இயேசுவை நாம் எங்கே காணலாம்

1.ஓடுகின்ற அருவியெல்லாம்

தேடி அலைந்தேனே

ஆடுகின்ற அலைகடலில்

நாடி அயர்ந்தேனே

தேடுகின்ற என் எதிரே

தெய்வத்தைக் காணேனே

பாடுபடும் ஏழை நான்

அழுது வாடினேனே

music

2. வானமதில் பவனி வரும்

கார்முகில் கூட்டங்களே

வந்தருளும் இயேசுவையே

காட்டிட மாட்டீரோ

காலமெல்லாம் அவனியின்மேல்

வீசிடும் காற்றே நீ

கர்த்தர் இயேசு வாழுமிடம்

கூறிட மாட்டாயோ

3. கண்ணிரண்டும் புனலாக

நெஞ்சம் அனலாக

மண்டியிட்டு வீழ்ந்தேன்

நான் திருமறைமுன்பாக

விண்ணரசர் அன்புடனே

கண்விழிப்பாய் என்றார்

கண்விழித்தேன் என் முன்னே

கர்த்தர் இயேசு நின்றார்

இயேசுவை நாம் எங்கே காணலாம்

Margochis Jesus Voiceの他の作品

総て見るlogo