menu-iconlogo
huatong
huatong
avatar

Anbulla Maanvizhiye

P. Susheela/Tm Soundararajanhuatong
mrandytony3huatong
歌詞
レコーディング
ஆ: அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை

பெ: அன்புள்ள மன்னவனே

ஆசையில் ஓர் கடிதம்

அதைக் கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதி வந்தேன்....

ஆ: நலம் நலம்தானா

முல்லை மலரே

சுகம் சுகம்தானா

முத்து சுடரே,

நலம் நலம்தானா

முல்லை மலரே

சுகம் சுகம்தானா

முத்து சுடரே,

இளைய கன்னியின்

இடை மெலிந்ததோ

எடுத்த எடுப்பிலே

நடை தளர்ந்ததோ

வண்ணப் பூங்கொடி

வடிவம் கொண்டதோ

வாடைக் காற்றிலே

வாடி நின்றதோ....

ஆ: அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை....

பெ: நலம் நலம்தானே

நீ இருந்தால்

சுகம் சுகம் தானே

நினைவிருந்தால்,

நலம் நலம்தானே

நீ இருந்தால்

சுகம் சுகம் தானே

நினைவிருந்தால்,

இடை மெலிந்தது

இயற்கையல்லவா

நடை தளர்ந்தது

நாணம் அல்லவா

வண்ணப் பூங்கொடி

பெண்மை அல்லவா

வாழ வைத்ததும்

உண்மை அல்லவா.....

பெ: அன்புள்ள மன்னவனே

ஆசையில் ஓர் கடிதம்

அதைக் கைகளில் எழுதவில்லை

இரு கண்களில் எழுதி வந்தேன்....

ஆ: அன்புள்ள மான்விழியே

ஆசையில் ஓர் கடிதம்

நான் எழுதுவதென்னவென்றால்

உயிர்க் காதலில் ஓர் கவிதை....

பெ: உனக்கொரு பாடம்

சொல்ல வந்தேன்

எனக்கொரு பாடம்

கேட்டு கொண்டேன்,

ஆ: பருவம் என்பதே

பாடம் அல்லவா

பார்வை என்பதே

பள்ளி அல்லவா,

இருவரும்: ஒருவர் சொல்லவும்

ஒருவர் கேட்கவும்

இரவும் வந்தது

நிலவும் வந்தது....

ஆ: அன்புள்ள மான்விழியே

பெ: ஆசையில் ஓர் கடிதம்

ஆ: அதை கைகளில் எழுதவில்லை

பெ: இரு கண்களில் எழுதி வந்தேன்

P. Susheela/Tm Soundararajanの他の作品

総て見るlogo