menu-iconlogo
logo

Manasula Soora Kaathey (From "Cuckoo")

logo
歌詞
மனசுல சூரக் காத்தே

அடிக்குது காதல் பூத்தே

மனசுல சூரக் காத்தே

அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோறூட்டுதே

கனவே தாலாட்டுதே

மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே

உந்தன் வாசனை வானவில் காட்டுதே

வா வென்று சொல்லும் முன்னே வருகின்ற ஞாபகம்

கண்ணே உன் சொல்லில் கண்டேன் அறியாத தாய் முகம்

ரகசிய யோசனை கொடுக்குதே ரோதனை

சொல்லாத ஆசை என்னை

சுட சுட காய்ச்சுதே

பொல்லாத நெஞ்சில் வந்து

புது ஒளி பாய்ச்சுதே

கண்ணிலே

இல்லையே

காதலும்

நெஞ்சமே

காதலின்

தாயகம்

ஆனந்தம் பெண்ணாய் வந்தே அழகாக பேசுதே

மின்சார ரயிலும் வண்ணக் குயில் போல கூவுதே

கை தொடும் போதிலே கலங்கவும் தோணுதே

அன்பே உன் அன்பில் வீசும் கருவறை வாசமே

எப்போதும் என்னில் வீச மிதந்திடும் பாவமே

மூங்கிலே ராகமாய் மாறுதே

மூச்சிலே வான் ஒலி பாடுதே

மனசுல சூரக் காத்தே

அடிக்குது காதல் பூத்தே

நிலவே சோரூட்டுதே

கனவே தாலாட்டுதே

மின்னல் ஓசையும் காதிலே கேக்குதே

உந்தன் வாசனை வானவில் காட்டுதே