menu-iconlogo
huatong
huatong
歌詞
収録
படம் நான் அடிமை இல்லை

இசை விஜய் ஆனந்த்

பாடியவர்கள் எஸ்.பி,பி&ஜானகி

M)ஒரு ஜீவன் தான்

உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

F)இரு கண்ணிலும்

உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

M)பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது……

F)காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

M)ஒரு ஜீவன் தான்

உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

by Aravinth

M)ஈரேழு ஜென்மங்கள்

எடுத்தாலும் உனைச் சேருவேன் ஹோ...

F)வேறாரும் நெருங்காமல்

மன வாசல் தனை மூடுவேன்…

M)உருவானது நல்ல சிவரஞ்சனி

F)உனக்காகத்தான் இந்த கீதாஞ்சலி

M)ராகங்களின் ஆலாபனை

F)மோகங்களின் ஆராதனை

M)உடலும் மனமும்

தழுவும் பொழுதில் உருகும்

ஒரு ஜீவன் தான்

உன் பாடல் தான்

ஓயாமல் இசைக்கின்றது

F)காவேரி கடல் சேர

அணை தாண்டி வரவில்லையோ…

M)ஆசைகள் அலைபாய

ஆனந்தம் பெறவில்லையோ

F)வரும் நாளெல்லாம் இனி மதனோற்சவம்

M)வளையோசை தான் நல்ல மணிமந்திரம்

F)நான் தானய்யா நீலாம்பரி

M)தாலாட்டவா ஹ ஹ நடு ராத்திரி

F)ஸ்ருதியும் லயமும்

சுகமாய் இணையும் தருணம்

ஒரு ஜீவன் தான் (M)ம்ம்

உன் பாடல் தான் (M)ஆஆ

ஓயாமல் இசைக்கின்றது

M)இரு கண்ணிலும்

உன் ஞாபகம்

உறங்காமல் இருக்கின்றது

F)பாசங்களும் பந்தங்களும்

பிரித்தாலும் பிரியாதது….

M)காலங்களும் நேரங்களும்

கலைத்தாலும் கலையாதது

அன்புடன் அரவிந்த் நன்றி

S. P. Balasubrahmanyam/S. Janakiの他の作品

総て見るlogo