ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெட்கம்
ஏனம்மா என் நினைவில்
உன் நினைவே சொர்க்கம்
தானம்மா
வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம்
ஏனம்மா
என் நினைவில் உன் நினைவே
சொர்க்கம் தானம்மா
சின்ன மூக்குத்திப்பூ
வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில்
நீராட வா…ஆ..ஆ..ஆ
பெண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெள்ளி
கோலமா அத்தை மகன்
ஆசையிலே தொட்ட நாணமா
சின்ன மூக்குத்திப்பூ வரும்
முதல் சந்திப்பூ அந்தப்
பாலாற்றில் நீராட வா…ஆ..ஆ..ஆ.
ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெட்கம்
ஏனம்மா என் நினைவில்
உன் நினைவே சொர்க்கம்
தானம்மா..
ஆண் : வெள்ளிப்பனி
மேகங்கள் செல்லும்
ஊர் கோலங்கள் அவள்
பாதத்தில் என்னைச்
சேருங்கள்...
பெண் : அந்த மழை
மேகங்கள் எந்தன்
எதிர்காலங்கள் காதல்
தீவுக்கு வழிகாட்டுங்கள்...
ஆண் : நெஞ்சில்
அலை மோதும்
கடல் போலே ஓசை
பெண் : வந்து கரையேறும்
அலைக்கென்ன ஆசை
ஆண் : இன்ப மயக்கம் என்ன
பெண் : சின்னத் தயக்கம் என்ன
ஆண் : இந்தக் காலங்கள்
தவக்கோலங்கள் ஹா
ஹோ ஹோ
பெண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெள்ளி
கோலமா அத்தை மகன்
ஆசையிலே தொட்ட நாணமா
ஆண் : ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா..
பெண் : ஹா ஹா ஹா ஹா ஹா
ஹா ஹா ஹா..
ஆண் : ஹோ ஹோ ஹோ ஹோ
பெண் : ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண் : லா லா லா
பெண் : லாலாலா
ஆண் : ஒரு புல்லாங்குழல்
பாடும் தனி ராகங்கள்
உந்தன் தேகத்தில்
சுரம் பாடுமா
பெண் : அந்த சுரம்
பாடினால் தொட்டுச்
சுகம் தேடினால் கன்னி
மாடத்தில் குளிர் காலமா
ஆண் : நித்தம் ஒரு
கோடி கனவோடு
தூக்கம்
பெண் : ஆஹா புத்தம்
புதுப் பார்வை புரியாத
ஏக்கம்
ஆண் : ரத்த நாளங்களில்
பெண் : ஓடும் தாளங்களில்
ஆண் : ஒரு தாலாட்டுத்தான்
பாடுமோ... ஓ……ஓ…ஓ…..
ஆண் : வெண்ணிலவே
வெண்ணிலவே கரைந்தது
ஏனம்மா உன் நினைவில்
என் நினைவே கலைந்தது
ஏனம்மா சின்ன மூக்குத்திப்பூ
வரும் முதல் சந்திப்பூ
அந்தப் பாலாற்றில்
நீராட வா…ஆ..ஆ..ஆ..
பெண் : வெண்ணிலவே
வெண்ணிலவே வெள்ளி
கோலமா அத்தை மகன்
ஆசையிலே தொட்ட நாணமா