ஆண் : ஓ ராஜகுமாரி ரகசிய சிருங்காரி
மெல்ல எந்தன் காதோடு நீ பாடு கானல் வரி
பெண் : ஓ..ஓ.. தேவ குமாரா
கண்மயங்கும் சிங்காரா
உன்னிரண்டு தோளோடு உறவாடும் காதல் புறா..
ஆண்: கட்டில் அறையில் கண்ணு முழிச்சா
சொர்க்கம் கிட்டுமடி
பெண் : அத்தானுக்கு அந்த விஷயம்
எல்லாம் அத்துப்படி
ஆண் : கட்டிப்புடி
தொட்டுப் படி
மூன்றாம் பாலில் முன்னோர் சொன்னபடி
பெண் : என் கண்ணனுக்குக் காதல் வந்தனம்
ஆண் : என் கண்மணிக்கு ஜீவன் அர்ப்பணம்
பெண் : என் பெண்மை எல்லாம் உந்தன் சீதனம்
ஆண் : உன் சீதனங்கள் என்ன நூதனம்
பெண் : முடியவில்லை காதல் கண்ணா
மோக நர்த்தனம்
விடிய விடியக் கேட்குதையா உனது கீர்த்தனம்
ஆண்: சொர்க்கம் தாண்டிச் செல்லுமம்மா
எனது சொப்பனம்
போகப் போகக் காண வேண்டும்
புதிய தரிசனம்
பெ: லால லல்லா லால்லா லால்லா லா
ஆ: லல லாலலலா லால்லா லாலலா