menu-iconlogo
huatong
huatong
avatar

Margazhi Thingal Allava

S.Janaki/Unnikrishnanhuatong
mrice_surveyshuatong
歌詞
レコーディング
மார்கழி திங்கள்

மதி நிறைந்த நன்னாளால்

நீராட போதுவீர்

போதுமினோ நேரிழையீர்

சீர்மல்கும் ஆய்ப்பாடி

செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன்

நந்தகோபன் குமரன்

ஏராந்த கண்ணி

யசோதை இளஞ்சிங்கம்….

மார்கழி திங்களல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும்

பொழுதல்லவா

ஒரு முறை உனது

திருமுகம் பார்த்தால்

விடை பெரும் உயிரல்லவா…

மார்கழி திங்களல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும்

பொழுதல்லவா

ஒரு முறை உனது

திருமுகம் பார்த்தால்

விடை பெரும்

உயிரல்லவா…

ஒரு முறை உனது

திருமுகம் பார்த்தால்

விடை பெரும் உயிரல்லவா…

வருவாய் தலைவா

வாழ்வே வெறும் கனவா ….

மார்கழி திங்களல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும்

பொழுதல்லவா

இதயம் இதயம் எரிகின்றதே

இறங்கிய கண்ணீர் அணைக்கின்றதே

உள்ளங்கையில் ஒழுகும் நீர் போல்

என் உயிரும் கரைவதென்ன

இருவரும் ஒரு முறை காண்போமா

இல்லை நீ மட்டும் என் உடல் காண்பாயா

கலை என்ற ஜோதியில் காதலை எரிப்பது

சரியா பிழையா விடை நீ சொல்லையா

மார்கழி திங்களல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும்

பொழுதல்லவா

ஒரு முறை உனது

திருமுகம் பார்த்தால்

விடை பெரும் உயிரல்லவா…

ஒரு முறை உனது

திருமுகம் பார்த்தால்

விடை பெரும் உயிரல்லவா…

வருவாய் தலைவா

வாழ்வே வெறும் கனவா ….

சூடி தந்த சுடர்க்கொடியே

சோகத்தை நிறுத்தி விடு

நாளை வரும் மாலை என்று

நம்பிக்கை வளர்த்து விடு

நம்பிக்கை வளர்த்து விடு

நம் காதல் ஜோதி களையும் ஜோதி

கலைமகள் மகளே வா வா…. ஆ ஆ ஆ

காதல் ஜோதி களையும் ஜோதி…. ஆ ஆ ஆ

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்

ஜோதி எப்படி ஜோதியை எரிக்கும்

வா……..

மார்கழி திங்களல்லவா

மதி கொஞ்சும் நாளல்லவா

இது கண்ணன் வரும்

பொழுதல்லவா........

S.Janaki/Unnikrishnanの他の作品

総て見るlogo