menu-iconlogo
huatong
huatong
avatar

Kalyaana Maalai

S.P.Balasubramaniyamhuatong
bianchinlouhuatong
歌詞
レコーディング
புது புது அர்த்தங்கள்

இளையராஜாவின் இசை தென்றல்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

சுதியோடு லயம் போலவே இணையாகும்

துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது

மாலையிடும் சொந்தம் முடிபோட்ட பந்தம்

பிரிவென்னும் சொல்லே அறியாதது

அழகான மனைவி அன்பான துணைவி

அமைந்தாலே பேரின்பமே

மடிமீது துயில சரசங்கள்

பயில மோகங்கள் ஆரம்பமே

நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி

நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

சுதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள்

வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா

சோலைமயில் தன்னை சிறைவைத்துப்

பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

நாள்தோறும் ரசிகன் பாராட்டும்

கலைஞன் காவல்கள் எனக்கில்லையே

சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு

இருக்கும் சிரிக்காத நாளில்லையே

துக்கம் சிலனேரம் பொங்கிவரும்போதும்

மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே

என் சோகம் என்னோடுதான்...

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்

சுதியோடு லயம் போலவே

இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே

என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்…

ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம் ம்ம்ம்ம்ம்

இந்த பாடல் தேர்வுக்கு நன்றி

S.P.Balasubramaniyamの他の作品

総て見るlogo