menu-iconlogo
huatong
huatong
歌詞
収録
உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே

கண்மணியே

அழுவதேன்

கண்மணியே

வழித்துணை நான் இருக்க

உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்ணீர் துளிகளை கண்கள் தாங்கும் கண்மணி

காதலின் நெஞ்சம் தான் தாங்கிடுமா

கல்லறை மீது தான் பூத்த பூக்கள் என்று தான்

வண்ணத்து பூச்சிகள் பார்த்திடுமா

மின்சார கம்பிகள் மீது மைனாக்கள் கூடு கட்டும்

நம் காதல் தடைகளை தாண்டும்

வளையாமல் நதிகள் இல்லை

வலிக்காமல் வாழ்க்கை இல்லை

வரும் காலம் காயம் ஆற்றும்

நிலவொளியை மட்டும் நம்பி

இலை எல்லாம் வாழ்வதில்லை

மின்மினியும் ஒளி கொடுக்கும்

தந்தையும் தாயையும் தாண்டி வந்தாய் தோழியே

இரண்டுமாய் என்றுமே நான் இருப்பேன்

தோளிலே நீயுமே சாயும் போது

எதிர்வரும் துயரங்கள் அனைத்தையும் நான் எதிா்ப்பேன்

வெந்நீரில் நீர் குளிப்பேன்

விறகாகி தீ குளிப்பேன்

உதிரத்தில் உன்னை கலப்பேன்

விழி மூடும் போதும் உன்னை

பிரியாமல் நான் இருப்பேன்

கனவுக்குள் காவல் இருப்பேன்

நான் என்றால் நானே இல்லை

நீ தானே நானாய் ஆனேன்

நீ அழுதால் நான் துடிப்பேன்

உனக்கென இருப்பேன்

உயிரையும் கொடுப்பேன்

உன்னை நான் பிரிந்தால்

உனக்கு முன் இறப்பேன்

கண்மணியே

கண்மணியே

அழுவதேன்

கண்மணியே

வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)

வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)

வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ)

வழித்துணை நான் இருக்க (ஹு-ஹு-யோ

Sunitha Sarathy/Harry Harlan/Karthik/Shalini Singhの他の作品

総て見るlogo