menu-iconlogo
huatong
huatong
t-rajendartm-soundararajan-amaithikku-peyarthaan-cover-image

Amaithikku Peyarthaan

T. Rajendar/T.M. Soundararajanhuatong
siempreopcioneshuatong
歌詞
収録
அமைதிக்கு பெயர் தான் சாந்தி சாந்தி சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி

உன் பிரிவினில் ஏதடி சாந்தி சாந்தி சாந்தி

உன் உறவினில் தானடி சாந்தி சாந்தி சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன் பிரிவினில் ஏதடி சாந்தி

உன் உறவினில் தானடி சாந்தி

சாந்தி என் சாந்தி

நீ கொண்ட பெயரை நான் உரைத்து கண்டேன் சாந்தி

நீ காட்டும் அன்பில் நான் கண்டு கொண்டேன் சாந்தி

நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பெற்ற துயரை நான் கேட்டு துடித்தேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

நீ பிரிந்த பின்னே நான் இழந்து நின்றேன் சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

எல்லோரும் வாழ்வில் தேடிடும் பாக்கியம் சாந்தி

என் உயிரோடு கலந்து எழுதிடும் வாக்கியம் சாந்தி

எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி

எது வந்த போதும் மறவாத செல்வம் சாந்தி

எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி

எனை இன்று வாடும் தனிமயில் இல்லயே சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன்னோடு வாழ்ந்த சில காலம் போதும் சாந்தி

மண்ணோடு மறையும் நாள் வரை நிலைக்கும் சாந்தி

கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி

கண்ணோடு வழியும் நீர் என்று மாறும் சாந்தி

பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி

பொன் ஏடு எழுதும் என் உறவு வாழ்த்தும் சாந்தி

அமைதிக்கு பெயர் தான் சாந்தி

அந்த அலையினில் ஏதடி சாந்தி

உன் பிரிவினில் ஏதடி சாந்தி

உன் உறவினில் தானடி சாந்தி

சாந்தி என் சாந்தி

சாந்தி என் சாந்தி

T. Rajendar/T.M. Soundararajanの他の作品

総て見るlogo