menu-iconlogo
huatong
huatong
tm-soundararajanp-susheela-ninaikka-therintha-maname-cover-image

Ninaikka Therintha Maname

Tm Soundararajan/P Susheelahuatong
pbblainehuatong
歌詞
収録
நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே உனக்கு

விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே உனக்கு

விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

மயங்கத் தெரிந்த கண்ணே உனக்கு

உறங்கத் தெரியாதா

மலரத் தெரிந்த அன்பே உனக்கு

மறையத் தெரியாதா

அன்பே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே உனக்கு

விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

எடுக்கத் தெரிந்த கரமே உனக்கு

கொடுக்கத் தெரியாதா

இனிக்கத் தெரிந்த கனியே உனக்கு

கசக்கத் தெரியாதா

படிக்கத் தெரிந்த இதழே உனக்கு

முடிக்கத் தெரியாதா

படரத் தெரிந்த பனியே உனக்கு

மறையத் தெரியாதா

பனியே மறையத் தெரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே உனக்கு

விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

கொதிக்கத் தெரிந்த நிலவே உனக்கு

குளிரத் தெரியாதா

குளிரும் தென்றல் காற்றே உனக்கு

பிரிக்கத் தெரியாதா

பிரிக்கத் தெரிந்த இறைவா உனக்கு

இணைக்கத் தெரியாதா

இணையத் தெரிந்த தலைவா உனக்கு

என்னை புரியாதா தலைவா

என்னை புரியாதா

நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு

மறக்கத் தெரியாதா

பழகத் தெரிந்த உயிரே உனக்கு

விலகத் தெரியாதா

உயிரே விலகத் தெரியாதா

Tm Soundararajan/P Susheelaの他の作品

総て見るlogo