menu-iconlogo
huatong
huatong
avatar

மதுரையில் பறந்த மீன் கொடியை Maduraiyil parantha meen kodiyai

Arokia Wilson Rajhuatong
வில்சன்ராஜ்huatong
가사
기록
இந்த பாடலை பதிவேற்றம் செய்தவர்

ஆரோக்கிய வில்சன் ராஜ்

starmaker id:13331185523

மதுரையில் பறந்த மீன் கொடியை

உன் கண்களில் கண்டேனே!

போரில் புதுமைகள் புரிந்த

சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே!

மதுரையில் பறந்த மீன் கொடியை

உன் கண்களில் கண்டேனே!

போரில் புதுமைகள் புரிந்த

சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே!

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை

உன் பெண்மையில் கண்டேனே!

தஞ்சையில் பறந்த புலிக்கொடியை

உன் பெண்மையில் கண்டேனே!

இவை மூன்றும் சேர்ந்து தோன்றும்

உன்னை தமிழகம் என்றேனே!

உன்னை தமிழகம் என்றேனே!

மதுரையில் பறந்த மீன் கொடியை

உன் கண்களில் கண்டேனே!

போரில் புதுமைகள் புரிந்த

சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே!

----------

காஞ்சித் தலைவன் கோவில் சிலைதான்

கண்மணியே உன் பொன்னுடலோ?

குடந்தையில் பாயும் காவிரி அலைதான்

காதலியே உன் பூங்குழலோ?

சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்

சேயிழையே உன் செவ்விதழோ?

தூத்துக்குடியின் முத்துக் குவியல்

திருமகளே உன் புன்னகையோ?

திருமகளே உன் புன்னகையோ?

மதுரையில் பறந்த மீன் கொடியை

உன் கண்களில் கண்டேனே!

போரில் புதுமைகள் புரிந்த

சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே!

------

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்

இளையவளே உன் நடையழகோ?

பொதிகை மலையில் புறப்படும் தென்றல்

இளையவளே உன் நடையழகோ?

புதுவை நகரில் புரட்சிக் கவியின்

குயிலோசை உன் வாய்மொழியோ

கோவையில் விளையும் பருத்தியில் வளரும்

நூலிழைதான் உன் இடையழகோ

குமரியில் காணும் கதிரவன் உதயம்

குலமகளே உன் வடிவழகோ?

இவை யாவும் ஒன்றாய் தோன்றும்

உன்னை தமிழகம் என்றேனே!

மதுரையில் பறந்த மீன் கொடியை

உன் கண்களில் கண்டேனே!

போரில் புதுமைகள் புரிந்த

சேரன் வில்லை புருவத்தில் கண்டேனே!

Arokia Wilson Raj의 다른 작품

모두 보기logo