menu-iconlogo
logo

Nenjil Maamazhai

logo
가사
ஆண்:நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..

தந்து வானம் கூத்தாட..

கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை,

வந்து எங்கும் பூத்தாட...

எத்தனை நாள் எத்தனை நாள்.. பார்ப்பது..

எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..

கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..

கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..

தந்து வானம் கூத்தாட..

கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை,

வந்து எங்கும் பூத்தாட...

.

பெண்:வாரத்தில் எத்தனை நாள் பார்ப்பது..

அன்றாடம் வந்து பார்க்க ஏங்குது..

வாராமல் போகும் நாட்கள் வீண் என ..

வம்பாக சண்டை போடா வாய்க்குது ..

ஆண்:சொல்லப்போனால் என் நாட்களை..

வண்ணம் பூசி தந்தவளும் நீதான்..

துள்ளல் இல்லா என் பார்வையில்..

தூண்டில் மீனாய் வந்தவளும் நீதான்..

எத்தனை நாள் எத்தனை நாள்.. பார்ப்பது..

எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..

கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..

கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..

தந்து வானம் கூத்தாட..

.

.

பெண்:பாசாங்கு செய்ததெல்லாம் போதுமே..

ராசாவை தேடி கண்கள் ஓடுமே..

ரோசாப்பூ மாலை ரெண்டு வேண்டுமே..

பேசாமல் மாற்றிக்கொள்ள தோன்றுமே.

ஆண்:பெண்கள் இல்லா என் வீட்டிலே..

பாதம் வைத்து நீயும் வரவேண்டும்..

தென்றல் இல்லா என் தோட்டத்தில்

உன்னால் தானே காற்று வரும் மீண்டும்..

எத்தனை நாள் எத்தனை நாள்.. பார்ப்பது..

எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..

கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..

கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..

நெஞ்சில் மாமழை.. நெஞ்சில் மாமழை..

தந்து வானம் கூத்தாட..

கொஞ்சும் தாமரை, கொஞ்சும் தாமரை,

வந்து எங்கும் பூத்தாட...

எத்தனை நாள் எத்தனை நாள்.. பார்ப்பது..

எட்டி நின்று எட்டி நின்று.. காய்வது..

கள்ளக்குரல் பாடல் உள்ளே ஓடுது..

கண்மூடி கண்மூடி காதோரம் பாடுது..

நன்றி

Nenjil Maamazhai - Haricharan/Shweta Mohan - 가사 & 커버