menu-iconlogo
logo

Enakkoru Snehidhi

logo
가사
படம் : ப்ரியமானவளே

எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி

தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

உன் முகம் பார்க்க தோன்றினால்

பூக்களைப் பார்த்துக் கொள்கிறேன்

பூக்களின் காதில் மெல்லமாய்

உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி

தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

உன் முகம் பார்க்க தோன்றினால்

பூக்களைப் பார்த்துக்கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய்

உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்

இசை : SA.ராஜ்குமார்

பாடியவர்கள் : ஹரிஹரன், மஹாலக்ஷ்மி

மேகமது சேராது

வான் மழையும் வாராது

தனிமையில் தவித்தேனே

உன்னை எண்ணி இளைத்தேனே

மேலிமையும் வாராது

கீழிமையும் சேராது

உனக்கிது புரியாதா

இலக்கணம் தெரியாதா

சம்மதங்கள் உள்ளபோதும்

வார்த்தை ஒன்று சொல்ல வேண்டும்

வார்த்தை வந்து சேரும் போது

நாணம் என்னைக் கட்டிப்போடும்

மௌனம் ஒன்று போதும் போதுமே

கண்கள் பேசிவிடுமே

எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி

தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

வரிகள் : வாலி

கைவளையல் குலுங்காமல்

கால் கொலுசு சிணுங்காமல்

அணைப்பது சுகமாகும்

அது ஒரு தவமாகும்

மோகம் ஒரு பூப்போல

தீண்டியதும் தீப்போல

கனவுகள் ஒருகோடி

நீ கொடு என் தோழி

உன்னைத் தந்து என்னை நீயும்

வாங்கிக்கொண்டு நாட்களாச்சு

உன்னைத் தொட்ட பின்பு தானே

முட்கள் கூட பூக்களாச்சு

விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால்

விறகும் வீணையாகும்

எனக்கொரு ஸ்நேகிதி ஸ்நேகிதி

தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்ணமி பௌர்ணமி

பேசும் பைங்கிளி

உன் முகம் பார்க்க தோன்றினால்

பூக்களை பார்த்துக்கொள்கிறேன்

பூக்களின் காதில் செல்லமாய்

உன் பெயர் சொல்லி பார்க்கிறேன்