menu-iconlogo
huatong
huatong
가사
기록
இசையமைப்பாளர் திரு.ஜேம்ஸ் வசந்தன்

அவர்களுக்கு மிக்க நன்றி .

இந்த அழகிய பாடலை

திரையில் பாடி நம்மை மகிழ்வித்த

திரு.நரேஷ் அவர்களுக்கும்

திருமதி.ஸ்ரேயா கோஷல் அவர்களுக்கும் நன்றி

பெண்: ஒரு வெட்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலைபாயுதே

இது என்ன முதலா முடிவா..

இனி எந்தன் உயிரும் உனதா?

புது இன்பம் தாலாட்டுதே…

போகச்சொல்லி கால்கள் தள்ள

நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

இது முதல் அனுபவமே

இனி இது தொடர்ந்திடுமே

இதுதரும் தடம் தடுமாற்றம் சுகம்

ஆண்: மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னைக் களவாடுதே….

இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா

புது இன்பம் தாலாட்டுதே

கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்

கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

பர பர பர வெனவே துடித் துடித்திடும் மனமே

வர வர வரக் கரைத் தாண்டிடுமே

பெண்: மேலும் சில முறை

உன் குறும்பிலே…

நானே தோற்கிறேன்…

உன் மடியிலே.. என் தலையணை

இருந்தால்….. உறங்குவேன்…

ஆண்: ஆணின் மனதிற்குள்ளும்..

பெண்மை இருக்கிறதே….

தூங்க வைத்திடவே….

நெஞ்சம் துடிக்கிறதே…

பெண்: ஒரு வரி நீ சொல்ல

ஒரு வரி நான் சொல்ல

எழுந்திடும் காதல் காவியம்

அனைவரும் கேட்க்கும் நாள் வரும்

ஆண்: மழை இன்று வருமா வருமா

குளிர் கொஞ்சம் தருமா தருமா

கனவென்னைக் களவாடுதே

பெண்: இது என்ன முதலா முடிவா?

இனி எந்தன் உயிரும் உனதா?

புது இன்பம் தாலாட்டுதே

ஆண்: ஓ… கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்

கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்

பெண்: இது முதல் அனுபவமே

இனி இது தொடர்ந்திடுமே

ஆண்: வர வர வரக் கரைத் தாண்டிடுமே…

ஆண்: ஆ..... காற்றில் கலந்து நீ..

என் முகத்திலே…

ஏனோ மோதினாய்

பூ மரங்களில்…

நீ இருப்பதால்

என் மேல் உதிர்கிறாய்…

பெண்: தூது அனுப்பிடவே….

நேரம் எனக்கில்லையே…

நினைத்தப்பொழுதினிலே….

வரணும் எதிரினிலே….

ஆண்: வெயிலிலே ஊர்கோலம்

இதுவரை நாம் போனோம்…

நிகழ்கிறதே கார்..க்காலமே..

நனைந்திடுவோம் நாள்தோறுமே

பெண்: ஒரு வெட்கம் வருதே வருதே

சிறு அச்சம் தருதே தருதே

மனம் இன்று அலைபாயுதே

ஆண்: இது என்ன முதலா முடிவா

இனி எந்தன் உயிரும் உனதா?

புது இன்பம் தாலாட்டு…தே

பெண்: ஓ… போகச்சொல்லி கால்கள் தள்ள

ஆண்: நிற்கச்சொல்லி நெஞ்சம் கிள்ள

பெண்: இது முதல் அனுபவமே

ஆண்: துடித்துடித்திடும் மனமே

வர வர வரக் கரைத்…. தாண்டிடுமே

CeylonRadio Presentation

James Vasanthan/Naresh Iyer/Shreya Ghoshal의 다른 작품

모두 보기logo