menu-iconlogo
huatong
huatong
가사
기록
அத்தமக உன்ன நெனச்சு

அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்

அத்தமக உன்ன நெனச்சு

அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்

அத்தனையும் மறந்துபுட்டேன்

அடியே உன்ன பாத்ததுமே

அத்தனையும் மறந்துபுட்டேன்

அடியே உன்ன பாத்ததுமே

அடி அஞ்சுகமே

உன்ன கொஞ்சனுமே

நான் மெல்ல

சேதி சொல்ல

ஒரு வார்த்த ஒன்னும் வரவில்ல

அத்தமக உன்ன நெனச்சு

அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்

அத்தனையும் மறந்துபுட்டேன்

அடியே உன்ன பாத்ததுமே

குயிலு கத்தும் தோப்புக்குள்ள

குரு குருனு பாக்கயில

மனதுக்குள்ள குடிசை ஒன்னு

மடமடனு சரியிதய்யா

வெயிலு வரும் நேரத்தில

மொட்டமாடி வடகம் போல

நீயும் இல்லா நேரத்தில

நெனப்பு மட்டும் காயிதய்யா

கண்ணால வலை விரிச்சு

தன்னால பொழம்பவச்ச

ஒன்னோட மனசுக்குள்ள

பொல்லாத காதல வச்ச

மாமாங்கம் ஆனா கூட

மாமா நான் காத்திருப்பேன்

தனனா பாடி

தாவணிய போட்டிருப்பேன்

பூத்திருப்பேன்

மாமன் மயன் உன்ன நெனச்சு

மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்

அத்தான் உன்ன பாத்த நிமிஷம்

அத்தனையும் மலர்ந்திருச்சே

தயிரு பானை உறியாட்டம்

தலைகீழ தொங்குறன்டி

தாலி ஒன்னு வாங்கி வச்சு

தைமாசம் தேடுறன்டி

கயித்து கட்டில் காத்திருக்கு

காவலுக்கும் நான் இருக்கு

நீயும் நானும் சேர்ந்திருக்க

எந்த ராவு தவமிருக்கு

அன்னாடம் காட்சியபோல்

ஓன் நெனப்ப செலவழிச்சேன்

மழையில நான் நனஞ்சு

பூமிக்கு கொடை புடுச்சேன்

வெள்ளாவி துணியாட்டம்

வெள்ளதான் ஏன் மனசு

அடியே புரிஞ்சு

என்னய நீ உடுத்து

நாள் குறுச்சு

மாமன் மயன் உன்ன நெனச்சு

மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்

மாமன் மயன் உன்ன நெனச்சு

மல்லிகை மொட்டு தலையில் வச்சேன்

அத்தான் உன்ன பாத்த நிமிஷம்

அத்தனையும் மலர்ந்திருச்சே

அத்தான் உன்ன பாத்த நிமிஷம்

அத்தனையும் மலர்ந்திருச்சே

மச்சானே

ஆசை வச்சேனே

நான் மெல்ல

சேதி சொல்ல

ஒரு வார்த்த ஒன்னு வரவில்ல

அத்தமக உன்ன நெனச்சு

அழகு கவிதை ஒன்னு வடிச்சேன்

அத்தனையும் மறந்துபுட்டேன்

அடியே உன்ன பாத்ததுமே

Jayachandran&S Janaki/laxmi의 다른 작품

모두 보기logo