menu-iconlogo
huatong
huatong
avatar

Azhaipaya Azhaipaya

Karthik/Harini/ Sid Sriramhuatong
ncheyndnoutlawhuatong
가사
기록
விழுந்தேன் நான் தொலைந்தேன் நான்

நிறையாமல் வழிந்தேன் நான்

இல்லாத பூக்களை கிள்ளாமல் கொய்கிறேன்

சொல்லாமல் உன்னிடன் தந்துவிட்டுப் போகிறேன்

காலில்லா ஆமை போல் காலம் ஓடுதே

இங்கே உன் இன்மையை உணர்கிற போது

ஒரே உண்மையை அறிகிறேன் நானே

என்னக்குள்ளே நிகழ்ந்திடும் அது

உன் நெஞ்சிலும் உண்டா என்று எண்ணியே இருதயம் துடிக்குதே

அழைப்பாயா அழைப்பாயா, நொடியேனும் அழைப்பாயா

பிடிவாதம் பிடிக்கின்றேன், முடியாமலே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா, படிக்காமல் கிடக்கின்றேன்

கடிகாரம் கடிக்கின்றேன், விடியாமலே அழைப்பாயா

நான் என்ன பேச வேண்டும் என்று சொல்லி பார்த்தேன்

நீ என்ன கூற வேண்டும் என்றும் சொல்லி பார்த்தேன்

நான் அத்தனைக்கும் ஒத்திகைகள் ஓடவிட்டு பார்த்தேன்

நீ எங்கு புன்னகைக்க வேண்டும் என்று கூட சேர்த்தேன்

நிலமை தொடர்ந்தால் என்ன நான் ஆகுவேன்

மறக்கும் முன்னே அழைத்தால் பிழைப்பேன்

அழைப்பாயா அழைப்பாயா அலைபேசி அழைப்பாயா

தலைகீழாய் குதிக்கின்றேன் குரல் கேட்கவே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா நடுஜாமம் விழிக்கின்றேன்

நாள்காட்டி கிழிக்கின்றேன் உனைப் பார்க்கவே அழைப்பாயா

ஹே பாதி தின்று மூடி வைத்த தீனி போலவே

என் காதல் பட்டு ஓடி போன பாடல் போலவே

என் ஆசை மீது வீசி விட்டு மாயமான வாசம் போலே

நீ பேசி வைக்கும் போது ஏக்கம் ஓடும் நெஞ்சின் மேலே

சுருங்கும் விரியும் புவியாய் மாறுதே

இதயம் இங்கே வேறேதோ நேருதே

அழைப்பாயா அழைப்பாயா தவறாமல் அழைப்பாயா

தவறாமல் அழைத்தாலே அது போதுமே அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா

அழைப்பாயா அழைப்பாயா மொழி எல்லாம் கரைந்தாலும்

மௌனங்கள் உரைத்தாலே அது போதுமே அழைப்பாயா

Karthik/Harini/ Sid Sriram의 다른 작품

모두 보기logo