menu-iconlogo
huatong
huatong
avatar

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்! KHAN

Khanhuatong
꧁𓊈★✧AHAMED✧★𓊉꧂huatong
가사
기록
ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!

உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!

உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்!

(மழைத்துளி)

ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க!

என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க!

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்

என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்

என் காலுக்கு சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல் வணக்கம்

என் கால் நடமாடுமையா உம்ம கட்டளைய வெல்லும் வரைக்கும்

நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்றபோதும்

சபை ஆடிய பாதமிது அது நிக்காது ஒருபோதும்!

ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க

என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க

(மழை த்துளி..2

MUSIC Create By KHAN

தண்ணியில மீன் அழுதா கரைக்கொரு தகவலும் வருவதில்ல

எனக்குள்ள நான் அழுதா துடைக்கவே எனக்கொரு நாதியில்ல

என் கண்ணீரு ஒவ்வொரு சொட்டும் வைரம் வைரம் ஆகுமே

சபதம் சபதம் என்றே சலங்கை சலங்கை பாடுமே

ஆ: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ

மனமே மனமே சபதம் வெல்லும் மட்டும் சாயாதிரு

விழியே விழியே இமையே தீயும்போதும் கலங்காதிரு

நதி நதி அத்தனையும் கடலில் சங்கமம்

நட்சத்திரம் அத்தனையும் பகலில் சங்கமம்

கலைகளின் வெகுமதி உன்னிடத்தில் சங்கமம் சங்கமம்

(மழைத்துளி..)

ஆலாலகண்டா, ஆடலுக்குத் தகப்பா, வணக்கமுங்க

என்னை ஆடாம ஆட்டி வச்ச வணக்கமுங்க

MUSIC Create By KHAN

ஆ: தந்தான தந்தானனா.

மழைக்காகத்தான் மேகம்! அட, கலைக்காகத்தான் நீயும்!

உயிர் கலந்தாடுவோம் நாளும், மகனே வா . . .

நீ சொந்தக்காலிலே நில்லு! தலை சுற்றும் பூமியை வெல்லு!

இது அப்பன் சொல்லிய சொல்லு! மகனே வா . . . மகனே வா . . .

ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான்!

தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்!

புலிகள் அழுவது ஏது? அட, பறவையும் அழ அறியாது!

போர்க்களம் நீ புகும்போது - முள்

தைப்பது கால் அறியாது!

மகனே... மகனே... காற்றுக்கு ஓய்வென்பது ஏது? அட ஏது?

கலைக்கொரு தோல்வி கிடையாது; கிடையாது!

(ஆலாலகண்டா)

விஸ்: என்னை ஆடாம ஆட்டி வெச்ச வணக்கமுங்க‌

என் காலுக்குச் சலங்கையிட்ட உன் காலடிக்கு முதல்வணக்கம்

என் கால் நடமாடுமையா நம்ம கட்டளைகள் வெல்லும்வரைக்கும்

நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்

விஸ்: நீ உண்டு உண்டு என்ற போதும் அட இல்லை இல்லை என்ற போதும்

சபை ஆடிய பாதமையா அது நிக்காது ஒருபோதும்

மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்!

உயிர்த்துளி உயிர்த்துளி வானில் சங்கமம்!

உடல் பொருள் ஆவியெல்லாம் கலையில் சங்கமம்! சங்கமம்! 4

Khan의 다른 작품

모두 보기logo
மழைத்துளி மழைத்துளி மண்ணில் சங்கமம்! KHAN - Khan - 가사 & 커버