தாவணி பொண்ணே சுகந்தானா
தங்கமே தளும்பும் சுகந்தானா
பாறையில் சின்ன பாதம் சுகந்தானா
தொட்ட பூ எல்லாம் சுகந்தானா
தொடாத பூவும் சுகந்தானா
தோப்புல ஜோடி மரங்கள் சுகந்தானா
ஒத்தையில் ஓடைக்கரையோரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
ஒத்தையில் ஒடும் ரயில் ஒரம்
கத்தியே உன் பேர் சொன்னேனே
அந்த இரயில் தூரம் போனதும்
நேரம் ஆனதும் கண்ணீர் விட்டேனே
முத்து மாமா என்னை விட்டு போகாதே
என் ஒத்த உசுரு போனா மீண்டும் வாராதே
ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே
ஓடக்கர ஒழவு காத்துல ஒருத்தி யாரு
இவ வெடிச்சி நிக்குற பருத்தி
தாவி வந்து சண்டை இடும் அந்த முகமா
தாவணிக்கு வந்த ஒரு நந்தவனமா
உள்ள சொந்தம் என்ன விட்டு போகாது
அட ஓடத்தண்ணி உப்பு தண்ணி ஆகாது
ஆத்தங்கரை மரமே அரசமர இலையே
ஆலமர கிளையே அதில் உறங்கும் கிளியே