menu-iconlogo
huatong
huatong
avatar

Athikalai Neram Kanavil

Lata Mangeshkar/S P Balasubramanyamhuatong
stevekeyshuatong
가사
기록
அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்

அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே ஹோய்

உன்னைச் சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லாலா

லலலலா லலலலா லாலா

முல்லைப்பூவை மோதும்

வெண் சங்குப்போல ஊதும்

காதல் வண்டின் பாட்டு

காலம் தோறும் கேட்டு

வீணைப்போல உன்னை

கைமீட்டும் இந்த வேளை

நூறு ராகம் சேர்க்கும்

நோயை கூட தீர்க்கும்

பாதி பாதியாக

சுகம் பாக்கி இங்கு ஏது

மீதம் இன்றி தந்தாள்

எனை ஏற்றுக்கொண்ட மாது

தேவியை மேவிய

தேவனே நீதான்

நீதரும் காதலில்

வாழ்பவள் நான் தான்

நீயில்லாமல் நானும் இல்லையே….

அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே ஹோய்

உன்னைச் சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே ஹோய்

அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்

மாலை ஒன்று சூடும்

பொன் மேனியாகும் சூடு

மாதம் தேதி பார்த்து

மனது சொல்லி கேட்டு

வேளை வந்து சேறும்

நம் விரகம் அன்று தீரும்

நீண்ட கால தாகம்

நெருங்கும் போது போகும்

காடு மேடு ஓடி

நதி கடலில் வந்து கூடும்

ஆசை நெஞ்சம் இங்கே

தினம் அணலில் வெந்து வாடும்

வாடலும் கூடலும்

மன்மதன் வேளை

வாழ்வது காதல் தான்

பார்க்கலாம் நாளை

பூர்வ ஜென்ம பந்தமல்லவோ….

அதிகாலை நேரம் கனவில் உன்னை பார்த்தேன்

அது கலைந்திடாமல் கையில் என்னை சேர்த்தேன்

விழி நீங்கிடாமல்

நீந்துகின்ற தென்றலே ஹோய்

உன்னைச் சேர்ந்திடாமல்

வாடும் இந்த அன்பிலே ஹோய்

லலலலா லலலலா லாலா

லலலலா லலலலா லாலா

Lata Mangeshkar/S P Balasubramanyam의 다른 작품

모두 보기logo