menu-iconlogo
huatong
huatong
가사
기록
நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே….

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே…

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே….

நீ நடந்து போகையில்

பாதம் நோகுமே

பூவப்போட்டுத்தாறேன்

அதில் நடந்து வாடி மானே..

பூவப்போட்டுத்தாறேன்

அதில் நடந்து வாடி மானே

நீ போகும் பாதையில்

மனசு போகுதே ராசா ..

நீ போகும் பாதையில்

மனசு போகுதே ராசா ..

நீ நடந்து போகையில்

பாதம் நோகுமே

பூவப்போட்டுத்தாறேன்

அதில் நடந்து வாங்க ராசா..

பூவப்போட்டுத்தாறேன்

அதில் நடந்து வாங்க ராசா..

வானத்தில பூத்திருக்கும்

வைரமணிப் பூவெடுத்து

மால ஒண்ணு நாந்தொடுத்து உன்

கழுத்தில் போடவா

பாதத்துக்கு ஓர் கொலுசு

வைரத்துலபோடவா

மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச்

சூடவா

ஆகாயத்தில் கோட்டை கட்டி

அரண்மனையைக் கட்டி அங்கே

காவலுக்கு தெய்வங்கள போட உன்னால்

ஆகாதைய்யா

ஆச கொண்டது அன்பினாலதான் அன்பு

தானே நம் செல்வம்

அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச்சேத்தது

போதும் போதும் ராசா

அது ஒண்ணு போதும் ராசா

போதும் போதும் மானே..

அது ஒன்னு போதும் மானே...

பள்ளிக்கூடம் போனதில்ல

பாடமும் படிச்சதில்ல

சொல்லி யாரும் கொடுக்கவில்ல

சொந்த புத்தி ஏதுமில்ல

என்னப்போல ஆம்பளய

பாத்துக்கொள்ள யார் இருக்கா

ஓன்னப்போல பொம்பளைக்கு

எத்தனயோ பேர் இருக்கா

சொன்னதையே சொல்லும் ஐயா

பச்சைக்கிளிப் பிள்ளையது

சொன்னதை நீ சொல்வதில்ல

ரெட்டைச்சுழிப் பிள்ளையிது

அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும்

அன்பு கொள்ள அது வேணாமே

நல்ல மால வந்தது வேள வந்தது

மனசு சேந்ததாலே, நம்ம மனசு

சேந்ததாலே..

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே….

நீ போகும் பாதையில்

மனசு போகுதே மானே….

நீ நடந்து போகையில்

பாதம் நோகுமே

பூவப்போட்டுத்தாறேன்

அதில் நடந்து வாங்க ராசா..

பூவப்போட்டுத்தாறேன்

அதில் நடந்து வாடி மானே

Malaysia Vasudevan/K. S. Chithra의 다른 작품

모두 보기logo