menu-iconlogo
logo

Senbagame Senbagame

logo
가사
ஷெண்பகமே ஷெண்பகமே

தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

ஷெண்பகமே ஷெண்பகமே

தென்பொதிகை சந்தனமே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே

உம் மேலே ஆசைப்பட்டு

காத்துக் காத்து நின்னேனே

உன் பாதம் போகும் பாதை நானும் போக வந்தேனே

உம் மேலே ஆசைப்பட்டு

காத்துக் காத்து நின்னேனே

உன் முகம் பாத்து நிம்மதியாச்சு

என் மனம் தானா பாடிடலாச்சு

என்னோட பாட்டுச் சத்தம்

தேடும் உன்னைப் பின்னாலே

எப்போதும் உன்னைத் தொட்டுப்

பாடப் போறேன் தன்னாலே

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் என் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

மூணாம் பிறையைப் போலக்

காணும் நெத்திப் பொட்டோட

நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட

மூணாம் பிறையைப் போலக்

காணும் நெத்திப் பொட்டோட

நானும் கலந்திருக்க வேணும் இந்தப் பாட்டோட

கருத்தது மேகம் தலைமுடி தானோ?

இழுத்தது என்ன பூவிழி தானோ?

எள்ளுப் பூ நாசிப் பத்திப்

பேசிப் பேசித் தீராது

உன் பாட்டுக் காரன் பாட்டு

ஒன்னை விட்டுப் போகாது

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே

தேடி வரும் எம் மனமே

சேர்ந்திருந்தா சம்மதமே

ஷெண்பகமே ஷெண்பகமே தென்பொதிகை சந்தனமே