ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...
அந்த ஒருவன்
ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்...
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன
துயரம்...
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன
மௌனம்...
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...
இரவும் பகலும் உன்னுருவம் அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
இரவும் பகலும் உன்னுருவம் அதில்
இங்கும் அங்கும் உன் உருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
அடக்கம் என்பது பெண்ணுருவம் அதை
அறிந்தால் மறையும் என்னுருவம்
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
மறைக்க முயன்றேன் முடியவில்லை உன்னை
மறக்க முயன்றேன் நடக்கவில்லை
ஆண்: நினைக்கும் நிலையிலும் நான் இல்லை
உன்னை நெருங்கும் தகுதியும் எனக்கில்லை
பெண் ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண் காதல்...
கேட்டேன் கேட்டது
கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
கேட்டேன் கேட்டது கிடைக்கவில்லை என்னை
கேலி செய்தாய் மனம் பொறுக்கவில்லை
ஆண்: வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
வாதம் செய்வது என் கடமை அதில்
வழியைக் காண்பது உன் திறமை
பெண்: கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
கண்டேன் கண்டது நல்ல வழி அது
காதலன் உடனே செல்லும் வழி
ஆண்: சொன்னேன் பல முறை யாசிக்கிறாய்
நீ சொன்னதை நானும்... யோசிக்கிறேன்
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
ஆண்: காதல்...
அந்த ஒருவன்
ஒருத்தியை மணந்து கொண்டால்
அந்த உரிமைக்குப் பெயர் என்ன
குடும்பம்...
நினைத்தவன் அவளை மறந்து விட்டால்
அந்த நிலைமையின் முடிவென்ன
துயரம்...
பிரிந்தவர் மீண்டும்
சேர்ந்து விட்டால்
அங்கு பெண்மையின் நிலை என்ன
மௌனம்...
ஒருத்தி ஒருவனை நினைத்து விட்டால்
அந்த உறவுக்குப் பெயரென்ன
காதல்...