menu-iconlogo
logo

Paarthen Siritthaen

logo
가사
பார்த்தேன் சிரித்தேன்,

பக்கத்தில் அழைத்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கத்தில் அழைத்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

கொடி தேன், இனி எங்கள் குடி தேன்

என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்

கொடி தேன், இனி எங்கள் குடி தேன்

என ஒரு படி தேன், பார்வையில் குடித்தேன்

துளி தேன் சிந்தாமல் களித்தேன்

ஒரு துளி தேன் சிந்தாமல் களித்தேன்

கைகளில் அணைத்தேன், அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்

உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்

மலர் தேன், போல் நானும் மலர்ந்தேன்

உனக்கென வளர்ந்தேன், பருவத்தில் மணந்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்

எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்

இனி தேன், இல்லாதபடி கதை முடித்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கத்தில் அழைத்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இதுவென மலைத்தேன்

பார்த்தேன் சிரித்தேன்,

பக்கம் வர துடித்தேன்

அன்று உனை தேன், என நான் நினைத்தேன்

அந்த மலை தேன், இவரென மலைத்தேன்

Paarthen Siritthaen - Pb Sreenivas/P Susheela - 가사 & 커버