இறைவனிடம் கையேந்துங்கள் - Iraivanidam Kaiyendhungal - Islamic Song
பாடகர்கள்: நாகூர் ஹனிபா
தமிழ் வரிகளுடன்
HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
இசை - Track by PVSings
Ready
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
பொறுமையுடன் கேட்டுப்பாருங்கள்
அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
இசை - Track by PVSings
Ready
இல்லை என்று சொல்லும் மனம் இல்லாதவன்
ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்
இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்
எண்ணங்களை இதயங்களைப் பார்க்கின்றவன்
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
இசை - Track by PVSings
Ready
ஆசையுடன் கேட்பவர்க்கு அள்ளித் தருவபவன்
அல்லல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்
பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்
பாவங்களை பார்வையினால் மாய்க்கின்றவன்
அல்லல்படும் மாந்தர்களே அயராதீர்கள்
அல்லாஹ்வின் பேரருளை நம்பி நில்லுங்கள்
அவனிடத்தில் குறை அனைத்தும் சொல்லிக் காட்டுங்கள்
அன்புநோக்கு தருகவென்று அழுது கேளுங்கள்
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
இசை - Track by PVSings
Ready
தேடும் நேயர் நெஞ்சங்களில் குடியிருப்பவன்
தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்
வாடும் இதயம் மலர்வதற்கு வழி வகுப்பவன்
வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்
அலை முழங்கும் கடல் படைத்து அழகு பார்ப்பவன்
அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்
தலை வணங்கி கேட்பவர்க்கு தந்து மகிழ்பவன்
தரணி எங்கும் நிறைந்து நிற்கும் மஹா வல்லவன்
இறைவனிடம் கையேந்துங்கள்
அவன் இல்லை என்று சொல்லுவதில்லை
Brought to you by PVSings / PaadumVanambaadi
Thanks for using my Track! - PVSings