menu-iconlogo
huatong
huatong
ranjithsuchitra-dole-dole-than-cover-image

Dole Dole Than

Ranjith/Suchitrahuatong
rochediagnosticshuatong
가사
기록
பாடல் : டோலு டோலு தான்

படம் : போக்கிரி

பாடியவர்: ரஞ்சித்சுசித்ரா

இசை: மணி சர்மா

பாடலாசிரியர்: பா விஜய்

(பல்லவி)

பெண் : டோலு டோலு தான் அடிக்கிறான்

இரு தோளும் தோளும் தான் உரசுறான்

மேலும் கீழுமாய் இழுக்குறான்

முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்

மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்

முன்னும் பின்னும் தான் முழுமையா

நான் சொர்க்க நரகத்தின் கலவையா

பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்

ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை

ஆண் : அய்ல அய்ல அடி ஆரியமாலா

அகன்ற விழிகள் என்ன கூரியவேலா

ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ தேளா

சிறுக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா

பெண் : கோலா கோலா

கோலா கோலா கோலா

கோலா …………………….

சரணம் 1

பெண் : சுடச் சுட மழையை

குளு குளு வெயிலை

முதல் முறை உலகத்தில் கண்டேனே

வெள்ளை நிற இரவை கரு நிற

பகலை முதல் முறை பார்த்தேனே

ஆண் : இடிகளை உரசி

புயல்களை அலசி

நடந்தவன் நான் தானே

இது என்ன மாயம்

மலர் ஒன்றை பறிக்க

முதல் முறை பயந்தேனே

பெண் : நீ ஙஞண நமன

ஆண் : யா ஆ

பெண் : நான் யரல வழள

ஆண் : யா ஆ

பெண் : நீ உடைந்து உருக

ஆண் : யா ஆ

பெண் : நான் உணர்ந்து

பருக……………..

சரணம் 2

பெண் : வலப்பக்கம் சுழலும்

பூமிப்பந்து திரும்பி

இடப்பக்கம் சுழலுது உன்னாலே

கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்

விரிந்தது குடை போலே

ஆண் : இருபது வருஷம்

பறவையைப் போலே

சுற்றிச் சுற்றித் திரிந்தேனே

இரண்டொரு நொடியில்

உனக்குள்ளே விழுந்து

முழுவதும் தொலைந்தேனே

பெண் : நீ எனக்குள் நுழைய

ஆண் : யா ஆ

பெண் : நான் உனக்குள் வளைய

ஆண் : யா ஆ

பெண் : நாம் நமக்குள் கரைய

ஆண் : யா ஆ

பெண் : நம் உலகம்

உறைய………………

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்

மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்

முன்னும் பின்னும் தான் முழுமையா

நான் சொர்க்க நரகத்தின் கலவையா

பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்

ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை….

ஆண் : அய்ல அய்ல

அடி ஆரியமாலா அகன்ற

விழிகள் என்ன கூரியவேலா

ஒய்லா ஒய்லா நீ சில்மிஷ

தேளா சிறுக்கி சிரிப்பு என்ன

மந்திரக்கோலா

பெண் : கோலா கோலா

கோலா கோலா கோலா....

Ranjith/Suchitra의 다른 작품

모두 보기logo