menu-iconlogo
huatong
huatong
가사
기록
படம்: மெல்ல திறந்தது கதவு

பாடகர்கள்:

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்& பி.சுசீலா

பதிவேற்றம்:

தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில்

ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில்

ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆஆஆஆ

தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

வளர்ந்த நாள் முதல் கார்குழலும்

அழைக்குதே உன்னைப் பூச்சூட

மயக்கம் ஏனடி பூங்குயிலே

தவிக்கிறேன் அடி நான் கூட

விளக்கு வைத்தால் துடித்திருப்பேன்

படுக்கையில் நான் புரண்டிருப்பேன்

கைகள் படாத இடம்தான் இப்போது

ஆசை விடாத சுகம்தான் அப்போது

ஏக்கம் ஏதோ கேட்கும்

ம்ம்ம்

தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில்

ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில்

ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

ஆ..

தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

மழைக்கு ஏங்கிய மாந்தளிரே

உனக்கு நான் சிறு தூறல்தான்

வியர்த்து வாடிய மெய்சிலிர்க்க

உனக்கு நான் மழைச்சாரல் தான்

அடுத்த கட்டம் நடப்பதெப்போ

எனக்கு உன்னைக் கொடுப்பதெப்போ

மாலை இடாமல் வசந்தம் வராது

வேளை வராமல் பெண் உன்னைத் தொடாது

போதும் போதும் ஊடல்

ஆஆஆஆ

தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

ஆஹா தில் தில் தில் மனதில்

ஒரு தல் தல் தல் காதல்

ஜில் ஜில் இள நெஞ்சில்

ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஜில் ஜில் இள நெஞ்சில்

ஜல் ஜல் ஒரு ஊஞ்சல்

ஆடல் பாடல் கூடல்

S. P. Balasubrahmanyam/P. Susheela의 다른 작품

모두 보기logo