menu-iconlogo
huatong
huatong
avatar

Kattu Kuyilu Manasukkulla

S. P. Balasubramaniamhuatong
olgamaucerihuatong
가사
기록
ஆண் 1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண் 2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆண் 1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண் 2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

Chorus : எல்லோரும்

மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே உல்லாச

நெஞ்சத்திலே ஹேய்...

ஆண் 1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண் 2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆண் 1 : போடா எல்லாம் விட்டுத் தள்ளு

பழச எல்லாம் சுட்டுத் தள்ளு

புதுசா இப்போ பொறந்தோமுன்னு

எண்ணிக்கொள்ளடா... டோய்..

ஆண் 2 : பயணம் எங்கே போனால் என்ன

பாதை நூறு ஆனால் என்ன

தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான்

சும்மா நில்லடா.. டோய்..

ஆண் 1 : ஊதக் காற்று

வீச உடம்புக்குள்ள கூச

குப்ப கூலம் பத்தவச்சி காயலாம் ஹோய்..

ஆண் 2 : தை பொறக்கும்

நாளை விடியும் நல்ல வேளை

பொங்கப்பாலு வெள்ளம் போல பாயலாம்

ஆ1 ஆ2 : அச்சி வெல்லம் பச்சரிசி

வெட்டி வச்ச செங்கரும்பு

அத்தனையும் தித்திக்கிற

நாள் தான்.... ஹோய்..

ஆண் 1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண் 2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

Chorus : எல்லோரும்

மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே

ஆஆஹா.. காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

ஆண் 1 : பந்தம் என்ன சொந்தம் என்ன

போனால் என்ன வந்தால் என்ன

உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட

ஜென்மம் நானில்லை.... ஹ.ஹா..

ஆண் 2 : பாசம் வைக்க நேசம் வைக்க

தோழன் உண்டு வாழ வைக்க

அவனைத் தவிர உறவுக்காரன்

யாரும் இங்கில்லே..

ஆண் 1 : உள்ள மட்டும் நானே

உசிரைக் கூடத்தானே

ஆண் 2 : என் நண்பன் கேட்டால்

வாங்கிக்கன்னு சொல்லுவேன்

ஆண் 1 : என் நண்பன் போட்ட சோறு

நிதமும் தின்னேன் பாரு

ஆண் 2 : நட்பைக் கூட கற்பைப்போல எண்ணுவேன்

ஆ1 ஆ2 : சோகம் விட்டு சொர்க்கம் தொட்டு

ராகம் இட்டு தாளம் இட்டு

பாட்டு பாடும் வானம்பாடி

நாம் தான்.... ஹேய்..

ஆண் 1 : காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

ஆண் 2 : தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

Chorus : எல்லோரும்

மொத்தத்திலே சந்தோஷ தெப்பத்திலே

தள்ளாடும் நேரத்திலே உல்லாச

நெஞ்சத்திலே ஹேய்...

காட்டுக்குயிலு மனசுக்குள்ள

பாட்டுக்கென்றும் பஞ்சமில்லே பாடத்தான்

தவிலைத் தட்டு துள்ளிக்கிட்டு

கவலை விட்டு கச்சைக் கட்டு ஆடத்தான்

S. P. Balasubramaniam의 다른 작품

모두 보기logo

추천 내용