menu-iconlogo
logo

Sonthamulla Vazhkkai

logo
가사
சொந்தம் உள்ள வாழ்க்கை

சொர்க்கத்துக்கு மேல

சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா

சொன்ன கதை இல்லை

கேட்ட கதை இல்லை

இந்த கதை போல வேறேதய்யா

ஆயிரம் யானை பலம்

அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா

பாசத்தையும் ரோசத்தையும்

பந்தி வைக்க முந்தும்

புன்னகைக்கும் கண்ணீருக்கும்

வேறுபாடு ஏதுமில்லை

ஆனந்தமே வீடு முழுக்க

துள்ளி விளையாடும்

ஒரு ஆலமர விழுதா

பல உறவு ஒண்ணா வாழும்

பாக்கும் நெஞ்சம் பாசத்துல

ஊஞ்சலாடுதே

ஒரு கண்ணு கலங்கினாலும்

பல கைகள் துடைக்க வருமே

இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்

வாழ ஏங்குதே

சொந்தம் உள்ள வாழ்க்கை

சொர்க்கத்துக்கு மேல

சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா

சொன்ன கதை இல்லை

கேட்ட கதை இல்லை

இந்த கதை போல வேறேதய்யா

அன்னை மடி போல தான்

அண்ணன் உள்ளம் தாங்குதே

தம்பி முகம் பார்க்கையில்

தந்தை முகம் தோன்றுதே

சொந்தம் வாழும் வீட்டில் தானே

தெய்வம் வந்து காவல் காக்கும்

தேவதைகள் தேடி வந்து

இந்த வீட்டில் பிறந்திடுமே

ஆயிரம் யானை பலம்

அண்ணன் தம்பி சேர்ந்திருந்தா

பாசத்தையும் ரோசத்தையும்

பந்தி வைக்க முந்தும்

புன்னகைக்கும் கண்ணீருக்கும்

வேறுபாடு ஏதுமில்லை

ஆனந்தமே வீடு முழுக்க

துள்ளி விளையாடும்

ஒரு ஆலமர விழுதா

பல உறவு ஒண்ணா வாழும்

பாக்கும் நெஞ்சம் பாசத்துல

ஊஞ்சலாடுதே

ஒரு கண்ணு கலங்கினாலும்

பல கைகள் துடைக்க வருமே

இப்படி ஒரு கூட்டுக்குள்ள தான்

வாழ ஏங்குதே

சொந்தம் உள்ள வாழ்க்கை

சொர்க்கத்துக்கு மேல

சொத்து சுகம் ஏதும் வேண்டாமய்யா

சொன்ன கதை இல்லை

கேட்ட கதை இல்லை

இந்த கதை போல வேறேதய்யா..

Sonthamulla Vazhkkai - Siddhu Kumar - 가사 & 커버