menu-iconlogo
huatong
huatong
가사
기록
பாடலை வழங்குவது: தீனா

இசை: தேவா

வரிகள்: வைரமுத்து

பாடியவர்கள்:எஸ்.பி.பாலா, கே.எஸ்.சித்ரா

(கோரஸ்)

நீ நடந்தால் நடையழகு

நீ சிரித்தால் சிரிப்பழகு

நீ பேசும் தமிழழகு

நீ ஒருவன் தானழகு

ஓ..ஓ நெற்றியிலே சரிந்து விழும்

நீள முடி அழகு

அந்த முடி கோதுகின்ற

அஞ்சு விரல் அழகு

(கோரஸ்)

சரணம் 1

நான் ஆசையை வென்ற...

ஒரு புத்தனும் அல்ல

என் காதலை சொல்ல..

நான் கம்பனும் அல்ல

உன் காது கடித்தேன்...

நான் கனவினில் மெல்ல..

இன்று கட்டி அணைத்தேன்...

இது கற்பனை அல்ல

அடி மனம் தவிக்கும் அடிக்கடி துடிக்கும்

ஆசையை திருகிவிடு...

இரு விழி மயங்கி இதழ்களில் இறங்கி

உயிர் வரை பருகி விடு...

ஓ.. முத்தம் வழங்காது ரத்தம் அடங்காது

(கோரஸ்)

ஆ.. நீ நடந்தால் நடையழகு

நீ சிரித்தால் சிரிப்பழகு

நீ பேசும் தமிழழகு

நீ ஒருவன் தானழகு

(கோரஸ்)

பாடலின் பதிவாக்கம் பிடித்திருந்தால்,

இறுதியில் கொடுக்கவும்

சரணம் 2

நான் பார்ப்பது எல்லாம்...

அட உன் முகம் தானே

நான் கேட்பது எல்லாம்...

அட உன் குரல் தானே

அந்த வான் மழை எல்லாம்...

இந்த பூமிக்கு தானே

என் வாலிபம் எல்லாம்...

இந்த சாமிக்கு தானே..

மடல் கொண்ட மலர்கள் மலர்ந்தது எனக்கு

மது ரசம் அருந்தட்டுமா

விடிகின்ற வரையில் முடிகின்ற வரையில்

கவிதைகள் எழுதட்டுமா...

முத்தம் என்ற கடலில் முத்துக் குளிப்போமா

(கோரஸ்)

ஓ..நீ நடந்தால் நடையழகு

நெருங்கி வரும் இடையழகு

வேலெரியும் விழியழகு

பால் வடியும் முகமழகு

ஓ..ஓ தங்க முலாம் பூசி வைத்த

அங்கம் ஒரு அழகு

தள்ளி நின்று எனை அழைக்கும்..

தாமரையும் அழகு

(கோரஸ்)

Sp Balasubramanyam/KS Chithra의 다른 작품

모두 보기logo