படம் : அருணகிரிநாதர்
பாடல் முத்தைத் தரு பத்தி
நடிகர் : டி.எம்.செளந்தரராஜன்
பாடகர் டி.எம்.சௌந்தரராஜன்
இசை : டி.ஆர்.பாப்பா
வெளியான ஆண்டு 1964
தமிழில் உங்களுக்கு அளிப்பது ஐசக்
பதிவேர்த்த நாள் 2 12 2019
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர
என வோதும் முருகா
( இசை )
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர என வோதும்
முத்தைத் தரு பத்தித் திரு நகை
அத்திக் கிறை சத்திச் சரவண
முத்திக் கொரு வித்துக் குருபர என வோதும்
முக்கட் பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்து முவர்க்கத் தமரரும் அடி பேண
முக்கட் பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்து முவர்க்கத் தமரரும் அடி பேண
( இசை )
பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்துத் தலை தத்தக் கணை தொடு
ஒற்றைக் கிரி மத்தைப் பொருதொரு
பட்டப் பகல் வட்டத் திகிரியில் இரவாக
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்
பட்சத் தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப் புயல் மெச்சத் தகு பொருள்
பட்சத் தொடு ரட்சித் தருள்வதும் ஒரு நாளே
( இசை )
தித்தித் தெய ஒத்தப் பரி புர
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக் கொக்க னடிக்கக் கழுகொடு கழுதாடத்
தித்தித் தெய ஒத்தப் பரி புர
நிர்த்தப் பதம் வைத்துப் பயிரவி
திக் கொக்க னடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக என வோத
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகு தொகு
சித்ரப் பவுரிக்கு த்ரிகடக என வோத
( இசை )
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகு குகு
குத்திப் புதை புக்குப் பிடியென முது கூகை
கொத்துப் பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகு குகு
குத்திப் புதை புக்குப் பிடியென முது கூகை
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப் பலி இட்டுக் குல கிரி
குத்துப் பட ஒத்துப் பொரவல பெருமாளே
கொட்புற் றெழ நட்பற் றவுணரை
வெட்டிப் பலி இட்டுக் குல கிரி
குத்துப் பட ஒத்துப் பொரவல பெருமாளே