menu-iconlogo
huatong
huatong
avatar

Mayakkamenna Intha மயக்கமென்ன இந்த மௌனம்

TMS/P. Susheelahuatong
r_ty_starhuatong
가사
기록
MUSIC

மயக்கமென்ன...

இந்த மௌனம் என்ன...

மணி மாளிகை தான்

கண்ணே..

மயக்கமென்ன

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான்

கண்ணே

தயக்கம் என்ன

இந்தச் சலனம் என்ன

அன்புக் காணிக்கை தான்

கண்ணே

கற்பனையில்

வரும்

கதைகளிலே

நான் கேட்டதுண்டு

கண்ணா

என் காதலுக்கே

வரும்

காணிக்கை என்றே

நினைத்ததில்லை

கண்ணா

MUSIC

தேர் போலே

ஒரு பொன்னூஞ்சல்

அதில்

தேவதை போலே

நீ ஆட

பூவாடை

வரும் மேனியிலே

உன்

புன்னகை இதழ்கள்

விளையாட

கார்காலம் என

விரிந்த கூந்தல்

கன்னத்தின் மீதே

கோலமிட

கை வளையும்

மை விழியும்

கட்டியணைத்து

கவி பாட

மயக்கமென்ன

ம்

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான்

கண்ணே

MUSIC

பாடிவரும்

வண்ண நீரோடை

உன்னை

பாத பூஜை

செய்து வர

ஓடிவரும்

அந்த ஓடையிலே

உன்

உள்ளமும் சேர்ந்து

மிதந்து வர

மல்லிகை காற்று

மெல்லிடை மீது

மந்திரம் போட்டு

தாலாட்ட

வள்ளி மலைத்தேன்

அள்ளி எழுந்த

வண்ண இதழ் உன்னை

நீராட்ட

மயக்கமென்ன

ஆஹா

இந்த மௌனம் என்ன

மணி மாளிகை தான்

கண்ணே

MUSIC

அன்னத்தைத் தொட்ட

கைகளினால்

மது கிண்ணத்தை இனி நான்

தொட மாட்டேன்

கன்னத்தில் இருக்கும்

கிண்ணத்தை எடுத்து

மதுவருந்தாமல்

விட மாட்டேன்

உன்னையல்லால் ஒரு

பெண்ணை இனி நான்

உள்ளத்தினாலும்

தொட மாட்டேன்

உன் உள்ளம் இருப்பது

என்னிடமே

அதை

உயிர் போனாலும்

தர மாட்டேன்

மயக்கமென்ன

ஆஹா...

இந்த மௌனம் என்ன

ஆ...

மணி மாளிகை தான்

கண்ணே

ஆ...

தயக்கம் என்ன

ஆஹா...

இந்தச் சலனம் என்ன

ஆஹா...

அன்புக் காணிக்கை தான் (Female: ஆஹா)

கண்ணே

அன்புக் காணிக்கை தான் (Female: ஆஹா)

கண்ணே

TMS/P. Susheela의 다른 작품

모두 보기logo