menu-iconlogo
huatong
huatong
tmsoundararajan-noolumillai-vaalumillai-cover-image

Noolumillai Vaalumillai

T.M.Soundararajanhuatong
ncunninghamquickhuatong
가사
기록
S1 : வசந்த ஊஞ்சலிலே

அசைந்த பூங்கொடியே

உதிர்ந்த மாயம் என்ன

உன் இதய சோகம் என்ன

உன் இதய சோகம் என்ன

நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா

நானும் வாழ்வை ரசிப்பேனா

S2 : நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா....

நானும் வாழ்வை ரசிப்பேனா..

S2 : நினைவு வெள்ளம் பெருகி வர

நெருப்பெனவே சுடுகிறது

படுக்கை.. விரித்து போட்டேன்

அதில் முள்ளாய் அவளின் நினைவு

பாழும்.. உலகை வெறுத்தேன்

அதில் ஏனோ இன்னும் உயிரு

படுக்கை.. விரித்து போட்டேன்

அதில் முள்ளாய் அவளின் நினைவு

பாழும்.. உலகை வெறுத்தேன்

அதில் ஏனோ இன்னும் உயிரு

மண்ணுலகில் ஜென்மம் என

என்னை ஏனோ இன்று வரை

விட்டு வைத்தாய்....

கண்ணிரண்டில் திராட்சை கொடி

எண்ணம் வைத்து

கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

இறைவா....

கண்ணீரை பிழிந்தெடுத்தாய்

நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா....

நானும் வாழ்வை ரசிப்பேனா..

S1 : நிழல் உருவில் இணைந்திருக்க

நிஜம் வடிவில் பிரிந்திருக்க

பூத்தால்... மலரும் உதிரும்

நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை

நிலவும்... தேய்ந்து வளரும்

அவள் நினைவோ தேய்வதில்லை..

பூத்தால்... மலரும் உதிரும்

நெஞ்சில் பூத்தாள் உதிரவில்லை..

நிலவும்... தேய்ந்து வளரும்

அவள் நினைவோ தேய்வதில்லை

காடு தன்னில் பாவி உயிர் வேகும் வரை

பாவை உன்னை நினைத்திடுமே

பாடையிலே போகையிலும்

தேவி உன்னை தேடி உயிர் பறந்திடுமே

உறவை.. தேடி உயிர் பறந்திடுமே

நூலுமில்லை வாலுமில்லை

வானில் பட்டம் விடுவேனா

Both : நாதி இல்லை தேவி இல்லை

நானும் வாழ்வை ரசிப்பேனா....

நானும் வாழ்வை ரசிப்பேனா....

நானும் வாழ்வை ரசிப்பேனா...

நன்றி... நன்றி... நன்றி...

T.M.Soundararajan의 다른 작품

모두 보기logo