menu-iconlogo
huatong
huatong
tmsounderarajan-medaiyil-aadidum-cover-image

Medaiyil Aadidum

T.M.Sounderarajanhuatong
가사
기록
மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

மேனகை போலொரு பூநகை புதுப்பாட்டே

உன் மேனியின் சாயலோ ஆனந்த நீருற்றே..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய

பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ..ஓ ..

பழுக்க பழுக்க ரசம் பிழிய பிழிய

பழம் உள்ளூர கள்ளூர தள்ளாடுமோ

குடிக்க குடிக்க மனம் மிதக்க மிதக்க

தினம் வண்டாட்டம் கொண்டாட்டம் உண்டாகுமோ

ஓடை மீதாட ஓடம் நீர் வேண்டும்

உறவினில் நானாட ஒருவன் நீ வேண்டும்..

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மதன் விளையாட்டே

லா லா லா லா

ஹ் ஹா

லல்லா லா லா லா லா..

லா... லா லா லா லா

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோஓ. ஓ..ஒ

ஒடிய ஒடிய இடை நெளிய நெளிய நடை

உல்லாச பல்லாக்கில் ஊர்கோலமோ

நெருங்க நெருங்க மெல்ல ஒதுங்க ஒதுங்க

எனும் ஊடல்கள் யுவராணி ஒய்யாரமோ

மாலை விழலாமோ மஞ்சம் வரலாமோ

சேலையை தொடலாமோ கைகள் படலாமோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால் மன்மத விளையாட்டே

நழுவ நழுவ என்னைத்தழுவ தழுவ வரும்

வித்தைகள் கண்ணா உன் வெள்ளோட்டமோ

மயக்கி மயக்கி பின்பு மறைத்து மறைத்து

வைத்தல் அன்பே உன் செல்வாக்கின் அடையாளமோ

காதல் விளையாட காவல் கிடையாதோ

காவல் தடைப்போட்டால் ஆவல் மீறாதோ

மேடையில் ஆடிடும் மெல்லிய பூங்காற்றே

நீ ஆடையில் ஆடினால்.. மன்மத விளையாட்டே

T.M.Sounderarajan의 다른 작품

모두 보기logo