இயக்கம்
வசனம் இயக்கம்
திரைக்கதை வசனம் இயக்கம்
கதை திரைக்கதை வசனம் இயக்கம்
கத சுட்ட கத
வட சுட்ட கத
ஆயா வட சுட்ட கத
ஆய சுட்ட வடைய காக்கா சுட்ட கத கத
காக்கா கிட்ட போயி ஒரு நரி சொன்ன கத கத
காக்கா வாய பொளந்ததும்
கீழ விட்ட வட வட
கீழ விட்ட வடைய நரி சுட்ட
கத கத கத கத கத கத கத கத
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
ஜெய்ச்சாலும் கதை இருக்கு
தோத்தாலும் கதை இருக்கு
சொல்லாம மனசுக்குல்ல எத்தனையோ கதை இருக்கு
பொஞ்சாதிய தோத்த பயலே போரில் ஜெய்ச்ச கதை இருக்கு
பொஞ்சாதிய மீட்டிட்டு வந்திட கொரங்கு கூட்ட படை இருக்கு
அவ கோபம் பெருகி முலைய திருகி ஊர எரிச்ச கதை இருக்கு
அதில் கருகி பறந்த காக்கா வாயில் பாட்டி சுட்ட வடை
அதில் பாட்டி சுட்ட வடை இருக்கு
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
பின்ன வந்த ஆமை நெஞ்ச
முன்ன போக யேங்க வச்சான்
முன்னே போன முயலுக்குள்ள
திமிற தந்து தூங்க வச்சான்
கதை ய முடிக்கு போது பாவி
கேள்வி ஒன்ன அங்க வச்சான்
வேதாளத்த திரும்பி போயி
மரத்து மேல தொங்க வச்சான்
கதைய நாலு துண்டா வெட்டி
அதையும் இதையும் மாத்திடான்
வெட்டி வேல ஏன்னு கேட்டேன்
திரைக்கதை னு சொல்லிட்டான்
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
கதை இல்லா நிமிஷம் இல்ல
கதை இல்லா மனுஷன் இல்ல
உன்னோட வாழ்க்கையிலே கதை இல்ல னா நீ எதுவும் இல்ல
பாம்பு சொன்ன வசனம் கேட்டு
பழத்த ஒருத்தே கடிச்சு தொலச்சான்
அது சொல்லி கொடுத்த வசனம் பேசி
ஒருத்தன் மனச முழுசா கலச்சான்
பாவம் வெதச்சான்
பழம் பழமா செய்தி சொல்ல
பல பல மொழி கொட்டி கிடக்கும்
நரியின் மனச தேத்த சொல்லு
சி சி ஞயான பழமும் புளிக்கும்
அந்த பழத்துக்காக தம்பி காரன்
உலகம் சுத்தி வந்தானே
பேச தெரிஞ்ச அண்ணன் அம்மா-அப்பா
உலகமுன்னானே
ஹேய் உலகம் தான் மேடையினா?
நீ நான் தான் நடிகனுனா?
நம்மோட ஆட்டத்த விஷில் அடிச்சு யார் ரசிப்பா?
கோடி கோடி மனுச கதைய
பூமிக்குள்ள பூட்டி வச்சான்
பூமிய தான் உருள விட்டு நம்மை யெல்லாம் ஆட்டி வச்சான்
பொறப்பு பொளப்பு இருப்புக்கெல்லாம் தினமும் பாட வச்சானே
அடுத்த வேள வவுத்துக்காக சண்ட போட வச்சானே
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
ஜெய்ச்சாலும் கதை இருக்கு
தோத்தாலும் கதை இருக்கு
சொல்லாம மனசுக்குல்ல எத்தனையோ கதை இருக்கு
காத்தில் கதை இருக்கு
இந்த மண்ணில் கதை இருக்கு
கதை இல்லா நிமிஷம் இல்ல
கதை இல்லா மனுஷன் இல்ல
உன்னோட வாழ்க்கையிலே கதை இல்ல னா நீ எதுவும் இல்ல
திரைக்கதை வசனம் இயக்கம்
திரைக்கதை வசனம் இயக்கம்
கதை திரைக்கதை திரைக்கதை திரைக்கதை
கதை கதை கதை கதை...