தங்கமணி ரத்தினம் தலையாட்டுச்சித்திரமே
தங்கமணி ரத்தினம் தலையாட்டுச்சித்திரமே...
சிங்காரத் தொட்டில்கட்டி சீராட்ட நீ உறங்கு
சிங்காரத் தொட்டில்கட்டி சீராட்ட நீ உறங்கு...
தங்கமணி ரத்தினம் தலையாட்டுச்சித்திரமே
சிங்காரத் தொட்டில்கட்டி சீராட்ட நீ உறங்கு
தங்கமணி ரத்தினம் தலையாட்டுச்சித்திரமே
தத்தித்தத்தி நீ நடப்பாய் தத்தைவாய் முத்துதிர்ப்பாய்
தத்தித்தத்தி நீ நடப்பாய் தத்தைவாய் முத்துதிர்ப்பாய்
பால்வடியும் பூச்சிரிப்பில் பாராளும் வருங்கலம்மா
பால்வடியும் பூச்சிரிப்பில் பாராளும் வருங்கலம்மா
கட்டிமுத்தம் தந்திடுவாய் கள்ளத்தனம் புரிந்திடுவாய்
கட்டிமுத்தம் தந்திடுவாய் கள்ளத்தனம் புரிந்திடுவாய்
ஆயிலையில் தூங்கும் கண்ணன் தாய்மடியில் - தவழ்ந்தானோ...
ஆயிலையில் தூங்கும் கண்ணன் தாய்மடியில் - தவழ்ந்தானோ
தாலேலோ... லாலேலோ... தாலேலோ...
சொப்பணமாய் வந்தவனே. சுகமாக தூங்கு கண்ணே...
தங்கமணி ரத்தினம் தலையாட்டுச்சித்திரமே
சிங்காரத் தொட்டில்கட்டி சீராட்ட நீ உறங்கு