இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
பொய் வாழ்ந்தால் என்ன
மெய் வீழ்ந்தால் என்ன
புவி வாழும் பேரன்பிலே
விஞ்ஞானம் ஒரு பாதி
மெய்ஞ்ஞானம் ஒரு பாதி
அஞ்ஞானம் சரிபாதியே
கடவுளை காப்பாற்ற மனிதன் உண்டு
மனிதனை காப்பாற்ற கடவுள் உண்டோ
எவர் வேதம்தான் விடை கூறுமோ
ஆங்காரம் ஓர் கண்ணிலே
ஓங்காரம் ஓர் கண்ணிலே
வா நாம் வாழ வாழ்வுண்டு மண்மீதிலே
சார்வாகம் வைதீகம்
ஆன்மிகம் தெய்வீகம்
நாள்தோறும் ஏதேதோ
சொல்கின்றதே
இவை ஏதும் கேளாமல்
இயல்பான ஓர் அன்பில்
இரு ஜீவன் வாழ்கின்றதே
இறை நூறு இருந்தால் என்ன
மதம் நூறு ஆண்டால் என்ன
துறவியும் காணாத அமைதி ஓன்று
இவர் வாழ்விலே நிறைந்தோடுதே
ஆகாயம் ஓர் உண்மையே
பூலோகம் ஓர் உண்மையே
வா நாம் காணும் பாசங்கள்
பேருண்மையே
வானாகி மண்ணாகி
வழியாகி ஒளியாகி
நீராகி நூறாகி
நிலையாகுமே
ஊனாகி உயிராகி
நானாகி நீயாகி
நாமாகி உறவாடுமே