menu-iconlogo
huatong
huatong
avatar

Sollitaley Ava Kaadhala

K.g. Ranjith/Shreya Ghoshalhuatong
tahirheyerphuatong
Lirik
Rakaman
சொல்லிட்டாளே அவ காதல

சொல்லும் போதே சுகம் தாளல

இது போல் ஒரு வார்த்தைய

யாரிடமும் நெஞ்சு கேக்கல

இனி வேறொரு வார்த்தைய

கேட்டிடவும் எண்ணிப் பார்க்கல

அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லும் போதே சுகம் தாளல

இது போல் ஒரு வார்த்தைய

யாரிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வார்த்தையே

பேசிடவும் எண்ணம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

அம்மையவள் சொன்ன சொல் கேக்கல

அப்பனவன் சொன்ன சொல் கேக்கல

உன்னுடைய சொல்ல கேட்டேன்

ரெண்டு பேரா ஒன்ன பாத்தேன்

மனசையே தொறந்து சொன்னா

எல்லாமே கிடைக்குது உலகத்துல

வருவத எடுத்து சொன்னா

சந்தோஷம் முளைக்குது இதயத்துல

அட சொன்ன சொல்லே போதும்

அதுக்கு ஈடே இல்ல ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லிட்டாளே அவ காதல

எத்தனையோ சொல்லு சொல்லாமலே

உள்ளத்திலே உண்டு என்பார்களே

சொல்லுரதில் பாதி இன்பம்

சொன்ன பின்னே ஏது துன்பம்

உதட்டுல இருந்து சொன்னா

தன்னாலே மறந்திடும் நிமிசத்துல

இதயத்தில் இருந்து சொன்னா

போகாம நிலைச்சிடும் உதிரத்துல

அவ சொன்ன சொல்லே போதும்

அதுக்கீடே இல்லை ஏதும் ஏதும்

சொல்லிட்டேனே இவ காதல

சொல்லும் போதே சுகம் தாளல

இது போல் ஒரு வார்த்தைய

யாரிடமும் சொல்ல தோணல

இனி வேறொரு வார்த்தையே

பேசிடவும் எண்ணம் கூடல

உனதன்பே ஒன்றே போதும்

அதுக்கு ஈடே இல்லை ஏதும் ஏதும்

Lebih Daripada K.g. Ranjith/Shreya Ghoshal

Lihat semualogo