என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
உள்ளம் நெருப்பென சுடுகுறதே
உன்னை பார்த்திட துடிக்கிறதே
உயிர் உனக்கென வாழ்கிறதே
இந்த உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
உன்னையே பார்த்த கண்கள்
இன்று ஒளியற்று கிடக்கிறது
உன்னையே நினைத்த மனம்
இன்று உணர்வற்று புரள்கிறது
எனக்கு சொந்தமும் வந்தமும்
சுற்றும் சூழலும் யாவும் நீதானே
நான் பேசிடும் பேச்சும்
சுவாசிக்கும் மூச்சும்
எதுவும் நீதானே
கடலுக்கும் அணையுண்டு
உன்மை அன்புக்கு அணையுண்டா .....
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
எதுவரை பொறுகணுமோ
நானும் அதுவரை பொறுத்துவிட்டேன்
பிறந்திட்ட பாசத்துக்கு
இந்த நாள் வரை சிறைகிடந்தேன்
இவர்கள் பணத்துக்கும்
பகட்டுக்கும் பண்பற்ற
குணர்த்துக்கும் இனியும்
பணிவேனா
இவர்கள் காட்டிய வரனுக்கு
தலயை நீட்டி பலியென ஆவேனா
உன் உயிருக்கு ஒன்றென்றால்
இந்த உலகையே கொளுத்திடுவேன்
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
உள்ளம் நெருப்பென சுடுகிறதே
உன்னை பார்த்திட துடிக்கிறதே
உயிர் உனக்கென வாழ்கிறதே
இந்த உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
உலகத்தை வெறுக்கிறதே
என் வாழ்க்கை மன்னவனே
உன்னை என்று நான் அடைவேன்
என் வாழ்வின் இனியவனே
உனை எங்கு நான் இணைவேன்
This song by- sivakarthik rasigai
King-supreme