menu-iconlogo
logo

Ninaithathu Yaaro Neethane

logo
avatar
Manologo
michael_kmieciklogo
Nyanyi dalam App
Lirik
நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நாந்தானே

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நாந்தானே

நீதானே என் கோயில்..

உன் நாதம் என் நாவில்..

ஊர்வலம் போவோம் பூந்தேரில்..

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நாந்தானே

மனதில் ஒன்று விழுந்த்தம்மா

விழுந்தது பூவாய் எழுந்ததம்மா

கனவில் ஒன்று தெரிந்ததம்மா

கைகளில் வந்தேன் புரிந்ததம்மா

நானறியாத உலகினை பார்த்தேன்

நான் தெரியாத உறவினில் சேர்ந்தேண்

எனக்கோர் கீதை உன் மனமே

படிப்பேன் நானும் தினம் தினமே

பரவசமானேன் அன்பே...

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நாந்தானே

பூவெடுத்தேன் நான் தொடுத்தேன்

பூஜையின் நேரம் நான் கொடுத்தேன்

காலமெல்லாம் காத்திருப்பேன்

கண்ணனை தேடி சேர்ந்திருப்பேன்

பூவிழி மூட முடியவும் இல்லை

மூடிய போது விடியவும் இல்லை

கடலை தேடும் காவிரிப்போல்

கலந்திடவேண்டும் உன் மடிமேல்

இது புது சொந்தம் அன்பே...

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நாந்தானே

நீதானே என் கோயில்..

உன் நாதம் என் நாவில்..

ஊர்வலம் போவோம் பூந்தேரில்..

நினைத்தது யாரோ நீதானே

தினம் உன்னை பாட நாந்தானே