ஆன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்லஅஅஅஅ
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
இங்கு நீயொரு பாதி நானொரு பாதி
இதில் யார் பிரிந்தாலும் வேதனை பாதி
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்
காதலின் முன்னே நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்லஅஅஅ
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை
ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லைஐஐஐ
ஒரு தெய்வமில்லாமல் கோவிலுமில்லை
ஒரு கோவிலில்லாமல் தீபமுமில்லை
நீ எந்தன் கோவில் நான் அங்கு தீபம்
தெய்வத்தின் முன்னே நீயும் நானும் வேறல்ல
பெ: உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல
என் மேனியில் உன்னைப்
பிள்ளையைப் போலே நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
என் மேனியில் உன்னைப்
பிள்ளையைப் போலே நான்
வாரியணைத்தேன் ஆசையினாலே
நீ தருவாயோ நான் தருவேனோ
யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல
நீ இல்லாமல் நானும் நானல்ல