இன்னிசை பாடி வரும் இளங்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு
தேடல் தான் அதை தேடி தேடி
தேடும் மனசு தொலைகிறதே
இன்னிசை பாடி வரும் இளங்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
கண் இல்லையென்றாலும்
நிறம் பார்க்க முடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்க முடியாது
குயிலிசை போதுமே அட
குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்து விடும்
கண்ணில் தோன்றா காட்சி
என்றால் கற்பனை வளர்ந்து விடும்
ஆடல் போல தேடல் ஒரு சுகமே
இன்னிசை பாடி வரும் இளங்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாண்டொலி கேட்பதில்லை
உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு கிடையாது
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே
மிக அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசி இருக்கும்
ஆடல் போல தேடல் ஒரு சுகமே
இன்னிசை பாடி வரும் இளங்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கை ஒரு தேடல்
தான் அதை தேடி தேடி தேடும்
மனசு தொலைகிறதே....
இன்னிசை பாடி வரும் இளங்
காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை.