menu-iconlogo
huatong
huatong
avatar

yaar indha muyal kutti

Paayum Pulihuatong
greatallah1huatong
Lirik
Rakaman
யார் இந்த முயல் குட்டி

உன் பேர் என்ன முயல் குட்டி

யார் இந்த முயல் குட்டி

உன் பேர் என்ன முயல் குட்டி

வெள்ளை வெள்ளையாய் வித்தியாசமாய்

வீதி கடக்கும் துண்டு மேகமாய்

யார் இந்த முயல் குட்டி

உன் பெயர் என்ன முயல் குட்டி

தீயில் எரியும் மூங்கில் காட்டில்

திசையை மறந்த பட்டாம்பூச்சியாய்

பர பரப்பான போக்குவரத்தில்

பல்லூனை தொலைத்த பச்சை பிள்ளையாய்

யார் இந்த முயல் குட்டி

உன் பேர் என்ன முயல் குட்டி

அழகை நீட்டி ஆளை இழுத்தாய்

அச்சத்தாலே ஆசீர்வதித்தாய்

பார்த்த பார்வையில் பச்சை குத்தினாய்

பயந்த விழியினால் பைத்தியம் செய்தாய்

உந்தன் பின்னால் நான் வருவேனோ

எந்தன் பின்னால் நீ வருவாயோ

சாலை கடக்க முடியும் உன்னால்

உன்னை கடக்க முடியாது என்னால்

முடியாது என்னால்.....

யார் இந்த முயல் குட்டி

உன் பேர் என்ன முயல் குட்டி

ஒரு கை காட்டி என்னை அழைத்தாள்

இரு கை நீட்டி ஏந்தி கொள்வேன்

பெண்ணே நீயும் சாலை கடந்தால்

பிறவி பெருங்கடல் நானும் கடப்பேன்

சாலை கடந்தால் மறப்பாயோ

சாகும் வரையில் மறப்பேனோ

சாலை கடக்க முடியும் உன்னால்

உன்னை கடக்க முடியாது என்னால்

முடியாது என்னால்.....

யார் இந்த முயல் குட்டி...

Lebih Daripada Paayum Puli

Lihat semualogo
yaar indha muyal kutti oleh Paayum Puli - Lirik dan Liputan